மீண்டும் அதிரடி 2 ஜியோ திட்டங்கள் மீது திருத்தம் இனி நாள் ஒன்றிற்கு 5ஜிபி

இந்தியாவின் 4ஜி பயன்பாட்டை ஒரே ஆண்டிற்குள் முடிந்தளவு உயர்த்தி, நம்மையெல்லாம் 5ஜி சேவைக்காக தயார் படுத்தி வைத்திருக்கும் பெருமை ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்திற்கே சேரும்.

முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோவின் அறிமுகமானது 1ஜிபி அளவிலான அதிவேக 4ஜி டேட்டாவை வெறும் ரூ.4/- என்கிற அடைப்புக்குறிக்குள் கொண்டுவந்துவிட்டது என்பதே அதற்கு சாட்சி.

பார்தி ஏர்டெல், வோடாபோன் இந்தியா, ஐடியா, பிஎஸ்என்எல் ஆகிய பிரபல நிறுவனங்கள் அனைத்துமே, வியாபார யுக்திகளை மறந்து வாடிக்கையாளர்களை தக்கவைத்துக் கொள்வதற்காக ஜியோவுடன் போட்டி போடுவதையே பெரும் வேலையாக கொண்டுள்ளன.

ஒருகட்டத்தில் போட்டி திட்டங்களை அறிவிக்கும் பாணி ஓய்ந்து ஏற்கனவே இருக்கும் திட்டங்களின் மீதான திருத்தங்கள் நிகழ்த்தும் பாணி உருவானது. அதாவது அதே விலையில் கூடுதல் நன்மைகள் அல்லது செல்லுபடி காலம் நீட்டிப்பு ஆகிய திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

இந்திய டெலிகாம் துறையில் நிலவும் இந்த கட்டண யுத்தத்திற்கு ஆதிகாரணமான ரிலையன்ஸ் ஜியோ - புதிய திட்டங்கள் அறிமுகம் செய்யும் மறுகையில் - திருத்தங்கள் நிகழ்த்தும் பாணியையும் கையாள தவறவில்லை. அப்படியான சமீபத்திய திருத்தமொன்றை ஜியோ நேற்று அறிவித்துள்ளது.

நேற்று முதல் அமலுக்கு வந்த ரிலையன்ஸ் ஜியோவின் 'ஹேப்பி நியூ இயர்' திருத்தங்கள் ஒருபக்கமிருக்க மறுகையில் அதே பெயரின் கீழ் மேலும் இரண்டு திட்டங்களின் நன்மைகள் திருத்தப்பட்டுள்ள்ளது. அதாவது நாள் ஒன்றிற்கு அதிகபட்ச 4ஜி டேட்டாவை வழங்கும் திட்டங்களான ரூ.509/- மற்றும் ரூ.799/- ஆகிய இரண்டிலும் அதிரடியான மாற்றங்கள் நிகழ்த்தப்பட்டுள்ளது.

முன்னதாக, 49 நாட்கள் என்கிற செல்லுபடியின் கீழ் நாள் ஒன்றிற்கு 2ஜிபி அளவிலான டேட்டா, வரம்பற்ற உள்ளூர் மற்றும் எஸ்டிடி அழைப்பு மற்றும் இலவச எஸ்எம்எஸ் ஆகியநன்மைகளை ரூ,509/- திட்டத்தின் கீழ் வழங்கி வந்தது. திருத்தங்களுக்கு பிறகு, அதே ரூ.509/- திட்டமானது நாள் ஒன்றிற்கு 3ஜிபி அளவிலான அதிவேக 4ஜி டேட்டாவை வழங்கும்.

அதே நேரத்தில் ரூ.509/- திட்டத்தின் செல்லுபடி காலமாது 49 நாட்களில் இருந்து, 28 நாட்களென்று குறைக்கப்பட்டுள்ளது. இதன் பொருள் இந்த திட்டம் 28 நாட்களுக்கு மொத்தம் 84 ஜிபி அளவிலான 4ஜி தரவை வழங்கும்.

மறுகையில் உள்ள ரூ.799/- திட்டமானது இனி நாள் ஒன்றிற்கு 5ஜிபி அளவிலான டேட்டாவை மொத்தம் 28 நாட்கள் என்கிற செல்லுபடி காலத்தின் கீழ் வழங்கும். இதற்கு முன்னர் இதே திட்டம் நாள் ஒன்றிற்கு 3.5ஜிபி அளவிலான டேட்டாவுடன் வரம்பற்ற உள்ளூர் மற்றும் எஸ்டிடி அழைப்பு மற்றும் இலவச எஸ்எம்எஸ் ஆகியநன்மைகளை வழங்கும்.

நேற்று முதல் அமலான திருத்தங்களை பொறுத்தமட்டில் ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.149, ரூ.349, ரூ.399 மற்றும் ரூ.449 ஆகிய ரீசார்ஜ்கள் நாள் ஒன்றிக்கு 1ஜிபி அளவிலான டேட்டா என்கிற வரம்பில் 28 ஜிபி, 70 ஜிபி, 84 ஜிபி மற்றும் 91 ஜிபி தரவுகளை முறையே 28 நாட்கள், 70 நாட்கள், 84 நாட்கள் 91 நாட்கள் செல்லுபடியாகும்.

மறுபுறம்நாள் ஒன்றிற்கு 1.5ஜிபி அளவிலான டேட்டாவை வழங்கும் ஜியோவின் ரூ.398, ரூ.448 மற்றும் ரூ.498 ஆகிய ரீசார்ஜ் திட்டங்களின் செல்லுபடி காலமானது முறையே 70 நாட்கள், 84 நாட்கள் 91 நாட்கள் என்று நீடிக்கப்பட்டு அவைகள் முறையே 105 ஜிபி, 126 ஜிபி மற்றும் 136 ஜிபி அளவிலான தரவுகளை வழங்கும்

நாம 10 பேர் பணத்தை போட்டாலே இதை செய்துவிடலாம் சுளீர் காட்டிய அஜித்