News Tig - Tamil News Website | Tamil News Paper | Canada News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Canada
செய்திகள்

செய்திகள்

காமெடி நடிகரும் எம்.எல்.ஏவுமான கருணாஸ் கடந்த சில தினங்களுக்கு முன் ஜாதி மோதலை தூண்டும் வகையில் பேசியதாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும் அவர் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி குறித்தும், காவல்துறை உயரதிகாரி ஒருவர் குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் பேசினார்/

மும்பையில் காயமடைந்த பாம்பிற்கு மருத்துவர்கள் எம்.ஆர்.ஐ ஸ்கேன் எடுத்துள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

கருணாஸ் ஜாதி வெறியை தூண்டும் விதமாக பேசிய பேச்சு கடும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில், தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷ் அதேபோல் ஜாதிப் பெருமையை பேசியிருப்பது கடும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

ரஷ்யாவின் ராணுவ ஜெட் விமானங்களையும், ஏவுகணைகளையும் வாங்கியது தொடர்பாகசீன ராணுவம் மீது சில தடைகளை அமெரிக்கா விதித்துள்ளது.

பாஜகவுடன் DMK  ரகசிய உறவு வைத்திருப்பதாகவும், பாராளுமன்ற தேர்தலின்போதோ அல்லது தேர்தலுக்கு பின்னரோ பாஜகவுடன் கூட்டணி சேர

தெலுங்கானாவில் சாதி மாறி திருமணம் செய்த காரணத்தினால், கணவனை இழந்து வாடும் அம்ருதாவுக்கு, இந்த விவகாரத்தில் ஏற்கனவே பாதிக்கப்பட்ட கௌசல்யா நேரில் சென்று ஆறுதல் தெரிவித்துள்ளார்.

வீடு தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால், தந்தை விஜயகுமார் போலீசார் மூலம் மிரட்டி, அடித்து விரட்டி விட்டதாக வனிதா பேட்டியளித்துள்ளார்.

நடிகர் கருணாஸ் தன்மீதுள்ள குற்றசாட்டுகளுக்கு பதிலளிக்கும் விதமாக இன்று செய்தியாளர்களை சந்தித்து வருத்தம் தெரிவித்தார்.

ஜெ. சிகிச்சை தொடர்பான, அதுவாக அழிந்துவிட்டதாய் அப்போலோ மருத்துவமனை தரப்பில் கூறப்பட்ட சிசிடிவி பதிவுகள் சசிகலா குடும்பத்தினரிடம் ஏற்கனவே ஒப்படைக்கப்பட்டுவிட்டதாக செய்திகள் வெளியே கசிந்துள்ளது.

சமீபத்தில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே நடந்த ஆர்ப்பாட்டம் ஒன்றில் பேசிய கருணாஸ் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி குறித்தும், காவல்துறை அதிகாரி ஒருவர் குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். இதனால் அவர் மிது 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்யும் முயற்சியில் உள்ளனர்.

கோவை எஸ்.என். எஸ் கல்லூரி நிர்வாக இயக்குனரின் பாலியல் தொல்லை தாங்க முடியவில்லை இளம்பெண் கதறும் வாட்ஸ் உரையாடல்கள் வெளியாகியுள்ளது.

தி.நகர் துணை கமிஷனர் அரவிந்தை கடுமையாக விமர்சனம் செய்தார். சட்டையை கழற்றி வைத்து விட்டு வா. ஒத்தைக்கு ஒத்தை மோதிப்பார்ப்போம் என சவால் விட்டார். அதேபோல், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியையும் அவர் கடுமையாக விமர்சித்தார். 

அதிமுகவின் சின்னமான இரட்டை இலை சின்னத்தில் திருப்புவனம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற நடிகர் கருணாஸ் அவ்வப்போது சர்ச்சைக்குரிய வகையில் பேசுவதை வாடிக்கையாக கொண்டுள்ளதாகவும், அதிமுக, திமுக, தினகரன் கட்சி என மாறி மாறி ஆதரவு கொடுத்து வரும் கருணாஸ், காலத்திற்கு தகுந்தால் போல் ஒருசிலரை போற்றியும் சிலரை தூற்றியும் பேசி வருவதாக கூறப்படுகிறது.

தென்கொரிய அதிபர் மூன் ஜே இன், மனைவி  கிம் ஜங் சூக்குடன் நேற்று வடகொரியாவில் உள்ள பியாங்யாங் நகருக்கு 3 நாள் பயணமாக  சென்றார். அங்கு வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் அவருக்கு  சிறப்பான வரவேற்பு அளித்தார்.பின் இரு தலைவர்களும் பேச்சு வார்த்தை நடத்தினர்.

லண்டனில் இந்திய குடும்பத்தினரை உயிரோடு எரித்துக் கொல்ல முயற்சி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிகள் துபாயில் நடைபெற்று வருகின்றது.இந்த போட்டியைக் காண சர்வதேச பயங்கரவாதியான தாவூத் இப்ராகிம் மற்றும் அவனது கூட்டாளிகள் வர வாய்ப்புள்ளதாக உலகில் உள்ள 6 முக்கியமான உளவுத்துறை நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு மெரீனாவில் இடம் ஒதுக்கியது அதிமுக அரசு போட்ட பிச்சை என்று இன்று காலை அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியிருந்தார். அமைச்சரின் இந்த கருத்துக்கு திமுகவினர் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூர் பார்ப்பன அக்ராஹர சிறையில் தண்டனை அனுபவித்து வரும் சசிகலாவை, நடிகரும் எம்.எல்.ஏவுமான சசிகலா சந்தித்தார். இந்த சந்திப்பை அமைச்சர் ஜெயகுமார் கிண்டல் செய்துள்ளார்.

பாஜகவினரால் தாக்கப்பட்டதாக கூறப்பட்ட ஆட்டோ டிரைவர் கதிரை தமிழக BJP தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நேரில் சந்தித்து பேசினார்.

கருணாநிதி குறித்து நான் பேசியது தவறு என்றும் அதற்காக தான் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன் எனவும் அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
NewsTIG
Toronto real estate agent