அனைத்து குண்டுகளின் தாய் குண்டை உருவாக்கியுள்ள சீனா; கலக்கத்தில் அமெரிக்கா!

சீனா ஒரு பெரிய வெடிகுண்டு ஒன்றை உருவாக்கி உள்ளதாக அறிக்கை வெளியாகி உள்ளது. சீனாவின் இந்த 'மதர் ஆப் ஆல் பாம்ப்ஸ்' ஆனது அமெரிக்காவின் வெடி குண்டுகளுக்கான சரியான பதிலாக இருக்கும் என்றும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

நல்ல செய்தி என்னவென்றால், அறிக்கை கூறும் வெடி குண்டு ஆனது மிகவு பெரியது தான் ஆனால் அது அணுவாயுதம் கிடையாது. அதாவது மிகவும் சக்திவாய்ந்த அனு அல்லாத ஆயுதம் என்று பொருள். இந்த அறிக்கை ஆனது நாட்டின் உத்தியோகபூர்வ ஊடகத்தின் வழியாக வெளியாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

போலியான தகவலா? அல்லது அதிகாரபூர்வமான தகவலா?

சீனாவின் மிகப்பெரிய பாதுகாப்புத் துறை நிறுவனமான நோரின்கோ (NORINCO) ஆனது, முதல் தடவையாக வான்வழி வெடிகுண்டு ஒன்றை காட்சிப்படுத்தி உள்ளதாகவும், அது தான் நாட்டின் மிகப்பெரிய அணு சக்தி இல்லாத குண்டு என்றும், அரசு நடத்தும் க்ளோபல் டைம்ஸ் அறிக்கை கூறி உள்ளது.

இது ஏன் குண்டுகளின் தாய் என்று அழைக்கப்படுகிறது?

அணு சக்தியை கொண்டிருக்காத இந்த குண்டு, குண்டுகளின் தாய் என்று அழைக்கப்படுவதற்கு ஒரு காரணம் உள்ளது. அணு குண்டு அளவிற்கு இல்லை என்றாலும் கூட இந்த குண்டு ஆனது பெரும் பேரழிவை ஏற்படுத்தும் திறனை கொண்டு உள்ளதாம். அதனால் தான் சீனா இதை "அனைத்து வெடிகுண்டுகளின் தாய்" என்று தனது அறிக்கையில் கூறி உள்ளதாம்.

 

பரிசோதனை நடந்ததா?

பரிசோதனை நடக்காமலா? நடந்தது.வெடி குண்டுகளை சுமந்து செல்லும் சீனாவின் எச்-6கே பாமர் மூலம் இந்த குண்டு பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது. அந்த பரிசோதனை வெடிப்பு வை சீன நார்த் இண்டஸ்ட்ரீஸ் க்ரூப் கார்ப்பரேசன் லிமிடெட் (NORINCO) நிறுவனம், அதன் வலைத்தளத்தில் ஒரு விளம்பர வாக வெளியிட்டு உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. ஒரு புதிய குண்டின் வெடிப்பு சோதனையையும் மற்றும் அதன் அழிவு சக்தியையும் சீனா வெளிப்படையாக, பொது பார்வைக்கு காட்டுவது இதுதான் முதல் முறை என்று அரசு நடத்தும் சின்ஹாவா நியூஸ் ஏஜென்சி தெரிவித்துள்ளது.

 

ஆப்கானிஸ்தான் போராளிகளுக்கு எதிரான போரை நடத்தியபோது

கடந்த ஆண்டு, ஆப்கானிஸ்தான் போராளிகளுக்கு எதிரான போரை நடத்தியபோது, ​​அமெரிக்க இராணுவம் ஒரு ஜி.பீ.-43 / மேஸிவ் ஆர்ட்டன்ஸ் ஏர் பிளாஸ்ட் (MOAB) வெடிகுண்டை (பொதுவாக "அனைத்து குண்டுகளின் தாய்" என்று அழைக்கப்டும்) இஸ்லாமிய அரசின் மீது வீசியது குறிப்பிடத்தக்கது. சீனாவும் இந்த குண்டுக்கு அதே புனைப்பெயரைப் பயன்படுத்திக் கொண்டாலும் கூட, இதை பல டன் எடையுள்ளதாக கூறப்படுகிறது. அதே சமயம் இது அமெரிக்க ஆயுதங்களை காட்டிலும் சிறிதாக மற்றும் இலகுவாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

 

சுமார் ஐந்து முதல் ஆறு மீட்டர் நீளமுள்ளதாக இருக்கும்

வெளியான வையும், மற்றும் குண்டு வெடிப்பின் வீச்சை வைத்து ஆராயும்போது, ​​இந்த குண்டு சுமார் ஐந்து முதல் ஆறு மீட்டர் நீளமுள்ளதாக இருக்கும். இந்த தகவலை பெய்ஜிங்கை சேர்ந்த இராணுவ ஆய்வாளர் வேய் டாங்சூ குளோபல் டைம்ஸிடம் உறுதி படுத்தி உள்ளார். "இந்த மிகப்பெரிய வெடிப்பு ஆனது மிகவும் எளிதான முறையில், முற்றிலும் வலுப்படுத்தப்பட்ட கட்டிடங்கள், கோட்டைகள் மற்றும் பாதுகாப்பு முகாம்களை கூட தரை மட்டம் ஆக்கும்" என்றும் அவர் கூறியுள்ளார்.

 

அமெரிக்கா

ஹெலிகாப்டர்களில் செல்லும் துருப்புகளுக்கு ஒரு தரையிறங்கும் மண்டலத்தை உருவாக்கவும் இதை பயன்படுத்தலாம் என்றும், இந்த குண்டு ஆனது அமெரிக்காவின் எச் -6கே குண்டை விட சிறியது மட்டும் இலகுவானது என்றும் வேய் கூறியுள்ளார். ஒரு குண்டு வேகமாக பறந்து செல்லக்கூடியதாகவும், ஒரு போக்குவரத்து விமானத்தை விட இலக்கை மிகவும் துல்லியமாக அடைய கூடியதாகவும் இருக்க வேண்டும். அந்த திறன்களை இந்த குண்டு பெற்றுள்ளது என்பதில் ஐயமில்லை, இனி ஐயம் கொள்ள வேண்டியது அமெரிக்கா தான்.

 

ரஷ்யா

இதற்கிடையில் அமெரிக்காவின் மதர் ஆப் பாம்ப்ஸ் வெடிகுண்டுக்கு பதில் அளிக்கும் வண்ணம், ரஷ்யா "அனைத்து குண்டுகளின் அப்பா" எனும் குண்டை உருவாக்கி வைத்து இருப்பதும், அது ஒரு பெரிய மற்றும் தெர்மோபார்சிக் வெடிகுண்டு ஆகும் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் சீனாவின் புதிய குண்டு ஆனது (வில் காட்டப்பட்டுள்ள குண்டு) ஒரு தெர்மோபார்சிக் ஆயுதம் இல்லை என்று ஒரு நார்னிகோ பிரதிநிதி தெளிவு படுத்தி உள்ளார்.