ஆப்பிள், பேஸ்புக், கூகுள்.. 2019 ஆண்டிற்கான சிறந்த நிறுவனம் எது.. பரபர பட்டியல் ரெடி!

நியூயார்க்: கிளாஸ்டோர்ஸ் என்ற அமைப்பு அமெரிக்காவில் செயல்படும் நிறுவனங்களில் எது சிறந்த நிறுவனம் என்ற பட்டியலை வெளியிட்டு இருக்கிறது.

2018ல் இந்த நிறுவனங்கள் எப்படி செயல்பட்டது, இது தனது பணியாளர்களை எப்படி கவனித்துக் கொண்டது, பணியாளர் நிறுவனர் உறவு எப்படி இருக்கிறது உள்ளிட்ட விஷயங்களை வைத்து இந்த கணக்கை எடுத்து இருக்கிறது. இதை வைத்து 2019 ஆண்டுக்கான சிறந்த நிறுவனம் எது என்று தெரிவித்துள்ளது.

மொத்தம் 100 நிறுவனங்கள் இந்த பட்டியலில் உள்ளது. இந்த கிளாஸ்டோர்ஸ் பட்டியல் என்பது உலகில் மிகவும் மதிக்கப்பட கூடிய பட்டியல் என்பது குறிப்பிடத்தக்கது.

பேஸ்புக் 
பேஸ்புக் நிறுவனம்

இந்த பட்டியலில் பேஸ்புக் நிறுவனம் 7வது இடத்தை பெற்றுள்ளது. 5 மதிப்பெண்ணுக்கு 4.5 மதிப்பெண் எடுத்து பேஸ்புக் ஏழாவது இடத்தை அடைந்துள்ளது. சென்ற வருடம் பேஸ்புக் நிறுவனம் முதல் இடத்தில் இருந்தது. ஆனால் 2018ல் நடந்த டேட்டா திருட்டு பிரச்சனை காரணமாக, பேஸ்புக் நிறுவனம் புள்ளிகள் சரிந்து பெரிய வீழ்ச்சி அடைந்தது.

 

கூகுள் 
கூகுள் நிறுவனம்

கூகுள் நிறுவனமும் அதேபோல்தான் பெரிய சரிவை சந்தித்து இருக்கிறது. 2015ல் முதல் இடத்தில் இருந்த கூகுள் தற்போது எட்டாவது இடத்திற்கு சென்று இருக்கிறது. கூகுள் 4.45 மதிப்பெண்கள் பெற்று இருக்கிறது. கூகுளில் ஏற்பட்ட தொடர் சர்ச்சைகள் காரணமாக, 20,000 பேர் மொத்தமாக கூகுளின் பல்வேறு கிளைகளில் இருந்து பதவி விலகி இருக்கிறார்கள். அதனால் கூகுளின் மதிப்பு பெரிய சரிவை சந்தித்தது.

 

முதல் 
முதல் இடம்

இந்த பட்டியலில் முதல் இடத்தில் பெய்ன் அண்ட் கோ என்று நிறுவனம் உள்ளது. 4.6 மதிப்பெண்களுடன் பெய்ன் அண்ட் கோ நிறுவனம் முதலிடம் பிடித்துள்ளது. இந்த நிறுவனம் அமெரிக்காவை சேர்ந்த பொருளாதார ஆலோசனை நிறுவனம் ஆகும்.

 

மற்ற 
மற்ற நிறுவனங்கள்

இந்த பட்டியலில் பெரிய நிறுவனமான அமேசான் நிறுவனம் இடம்பெறவில்லை. ஆப்பிள் நிறுவனம் 71வது இடம்பிடித்துள்ளது. மைக்ரோசாப்ட் நிறுவனம் 34 வது இடம் பிடித்துள்ளது. லின்க்டின் நிறுவனம் 6வது இடத்தை பிடித்துள்ளது. இந்த பட்டியல் பெரிய நிறுவனங்கள் இடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.