இந்த செய்திகளை வாசிப்பது ஏஐ ரோபோட் 1.0.. சீனாவில் வைரல் ஆகும் நியூஸ் - ரீடர் ரோபோட்! - வீடியோ

பெய்ஜிங்: சீனாவில் நியூஸ் வாசிப்பதற்காக ரோபோட் ஒன்று தனியார் தொலைக்காட்சி மூலம் அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கிறது.

வருடம் செல்ல செல்ல மனிதர்களின் வேலைகளை ரோபோக்கள் கொஞ்சம் கொஞ்சமாக பெற்று வருகிறது. இன்னும் 10 வருடங்களில் ரோபோக்களால் உலகில் பல கோடி பேர் விஐபிக்களாக வேலை இல்லாமல் வீட்டில் இருப்பார்கள் என்று ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த நிலையில் சீனாவை சேர்ந்த ஸின்ஹு நிறுவனம் தங்களது தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பதற்காக ரோபோட் ஒன்றை நியமித்து இருக்கிறது. ஆர்டிபிஷியல் இண்டலிஜென்ஸ் (Artificial Intelligence)எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் இந்த ரோபோட் செயல்படுகிறது.

ஆச்சர்யம் 
பெரிய ஆச்சர்யம்

நேற்று முதல் நாள் அந்த நிறுவனம், இனி எங்கள் செய்திகளை ரோபோக்கள் தொகுத்து வழங்கும் என்று கூறியது. இதையடுத்து நேற்று ரோபோக்கள் வந்து செய்தி வாசிக்கும் என்று நினைத்தவர்களுக்கு பெரிய ஆச்சர்யமும் அதிர்ச்சியும் காத்து இருந்தது. மனிதன் போலவே கொஞ்சம் கூட வித்தியாசம் இல்லாமல் ஒரு ரோபோட் வந்து செய்தி வாசித்தது.

 

Embedded video

Dr. Kash Sirinanda@kashthefuturist

World's first AI news anchor makes China debut

39

2:43 AM - Nov 9, 2018

46 people are talking about this

Twitter Ads info and privacy

உருவாக்கியது 
யார் உருவாக்கியது

 

பார்க்க அச்சு அசலாக மனிதன் போலவே இருக்கும் இந்த ரோபோட், சீனாவின் சர்ச் எஞ்சினான சோகோவும், ஸின்ஹு நிறுவனமும் இணைந்து உருவாக்கியது ஆகும். இதை முழுதாக வடிவமைக்க மூன்று வருடம் ஆகியுள்ளது. இதை போலவே இன்னொரு பெண் ரோபோட்டும் ஆங்கிலத்தில் செய்தி வாசிக்கும் வகையில் உருவாக்கி இருக்கிறார்கள்.

 

நாள் 
நாள் முழுக்க

இந்த நிலையில் இந்த ரோபோட் நாள் முழுக்க செய்தி வாசிக்கும் அளவிற்கு திறன் கொண்டது.அதாவது 24 மணி நேரமும் இது செய்தி வாசித்துக் கொண்டே இருக்கும். எல்லா செய்திகளையும் உடனுக்குடன் அழித்துக் கொண்டே இருக்கும். அதேபோல் இதில் சீனா, ஆங்கிலம் இல்லாமல் இன்னும் சில மொழிகள் விரைவில் ஏற்றப்பட உள்ளது.

 

உலகம் 
உலகம் முழுக்க

உலகம் முழுக்க இருக்கும் செய்திகளை இந்த ரோபோட் தொகுத்து வழங்கும். இது அந்நாட்டின் சர்ச் எஞ்சினான சோகோ உதவியுடன் செயல்படுவதால், எளிதாக தகவல்களை மக்களுக்கு அளிக்கும். அதேபோல் உண்மையான செய்திகளை இது உடனுக்குடன் அளிக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.