வெட்கம், மானம், ரோஷத்தை விட்டாதான் இங்க வேலை பார்க்க முடியும்!

பெய்ஜிங்கில் ஊழியர்களுக்கு ஒரு நிறுவனம் கடுமையான தண்டனைகளை தருகிறது.

பெய்ஜிங்: மானம், ரோஷம், வெட்கம், சூடு, சொரணை எதுவுமே இல்லாதவர்கள் மட்டும்தான் அந்த நிறுவனத்தில் வேலை பார்க்க முடியும். அப்படி ஒரு நிறுவனம் ஜப்பானில் உள்ளது.

வளர்ந்த நாடுதான் ஜப்பான்... அமெரிக்க குண்டு தாக்குதலுக்கு பிறகு, விடாமுயற்சி, அயராத உழைப்பு, கடுமையான அர்ப்பணிப்பு காரணமாக இன்று முன்னணி நாடாக திகழ்ந்து வருகிறது. விஞ்ஞானம், அறிவியல், மருத்துவம், தொழில் உள்ளிட்ட துறைகளிலும் தன் முன்னணி இடத்தை அசைந்து கொடுக்காது தக்க வைத்து கொண்டு வருகிறது.

விசுவாசிகள்

இதற்காக பல்வேறு நிறுவனங்கள் தங்களிடம் வேலை பார்க்கும் ஊழியர்களுக்காக எத்தனையோ சலுகைகளை கொடுத்து வருகிறது. அவர்களின் உடல்நலனிலும், சுயமரியாதையிலும் அக்கறை எடுத்து கவனித்து கொள்கிறது. இப்படி முதலாளிகளும், நிறுவனங்களும் தங்களுக்கு தரும் முக்கியத்துவத்தை அறிந்த தொழிலாளர்களும் விசுவாசமாக வேலை பார்த்து வருகிறார்கள்.

வீடு பராமரிப்பு

ஆனால் இதற்கெல்லாம் திருஷ்டியாக ஒரு நிறுவனம் கெட்ட பெயரை வாங்கி கொடுத்து வருகிறது. பெய்ஜிங்கில் வீடு பராமரிப்பு மற்றும் மறுசீரமைப்பு பணிகளை மேற்கொண்டு வரும் ஒரு நிறுவனம்தான் இப்போது ஹாட் ஆப் தி வேர்ல்டு!!

கரப்பான் பூச்சிகள்

வேலை பார்ப்பவர்களிடம் கண்டிப்புடன் நடந்து கொள்கிறோம் என்ற பெயரில் இந்த நிறுவனம் போடும் ஆட்டம் கொஞ்சம் நஞ்சமல்ல. ஒழுங்காக வேலை செய்ய தவறினால் ஊழியர்களுக்கு என்ன தண்டனை தெரியுமா? கரப்பான் பூச்சிகளை சாப்பிட வேண்டும்! சிறுநீரை அருந்த வேண்டும், மொட்டை அடித்துக்கொள்ள வேண்டும்!! பாத்ரூமில் வரும் தண்ணீரை குடிக்க வேண்டும்!!! இதுதான் அந்த தண்டனைகள்.

பெல்ட் அடி நிச்சயம்

எப்படிப்பட்ட தவறுகளுக்கு இந்த தண்டனை தெரியுமா? திருட்டு, கொள்ளை, பாலியல் தொந்தரவு இது மாதிரியெல்லாம் இல்லை. அந்த ஆபீசுக்கு நீட்டாக டிரஸ் போட்டு வராவிட்டாலோ, அல்லது லெதர் ஷூ அணியாவிட்டாலோ இந்த தண்டனைகளாம். ஒருவேளை இந்த தண்டனைகளை ஏற்று கொள்ள மாட்டேன் என்று யாராவது சொன்னால் அவ்வளவுதான்!! பெல்ட் அடிதானாம். இந்த பெல்ட் அடிக்கு அப்பறமாதான் சம்பள பிடித்தமும், அபராதமும் இருக்குமாம்.

வெ.மா.சூ.சொ.

அது மட்டும் கிடையாது, இந்த தண்டனைகள் எல்லாம் யாருக்கும் தெரியாமல் தனியாக தரமாட்டார்களாம். அந்த ஆபீஸே கூடி நின்று வேடிக்கை பார்க்கும்படி ஏற்பாடு செய்துதான் தண்டனை அந்த நபருக்கு தரப்படும். இப்படி சுற்றி நின்று வேடிக்கை பார்ப்பதால் நிறைய பேர் வேலையை விட்டு செல்கிறார்கள். ஆனால் இந்த தண்டனைகளை எல்லாம் ஒரு விஷயமாகவே நினைக்காதவர்கள் இன்னமும் அங்கயேதான் வெ.மா.சூ.சொ. எல்லாத்தையும் விட்டுட்டு வேலை பார்த்து கொண்டு இருக்கிறார்கள்.