ஆசைப்பட்டா.. சரி செத்து போன்னு ஹெல்ப் பண்ணேன்.. திகிலை கிளப்பிய கணவர்!

மனைவியின் தற்கொலைக்கு உதவிய கணவனுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

சிட்னி: "என் பொண்டாட்டி சாகணும்னு ஆசைப்பட்டா... அதான் ஹெல்ப் பண்ணினேன்" என்று ஒரு கணவர் கோர்ட்டில் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவை சேர்ந்தவர் கிரஹாம் மோரண்ட். இவரது மனைவி ஜெனிபர். கிரஹாமுக்கு 68 வயதாகிறது. ஜெனிபருக்கு வயது 56. ஜெனிபரிடம் கணவருக்கு எப்பவுமே சண்டை.. அனுசரணையாக பேசுவதும், நடந்து கொள்வதும் கிடையாது. அதனால் அவரை எப்பவுமே டார்ச்சர் செய்து வந்திருக்கிறார்.

கடுமையான மன உளைச்சல்

இதனால் ஜெனிபருக்கு வாழ்க்கையே வெறுத்துவிட்டது. இதனால் அவர் கடுமையான உளைச்சலுக்கே போய்விட்டார். இதற்கெல்லாம் காரணம் பணம்.. பணம்.. பணம்தான்!! மனைவி இறந்துவிட்டால் அவரது எல்ஐசி பணம் 1.4 மில்லியன் டாலர்கள் கிடைக்குமாம். அந்த பணத்தை ஆட்டைய போடத்தான் கிரஹாம் மனைவியை மனரீதியாக கொடுமை செய்ய ஆரம்பித்தார்.

[பிள்ளைன்னா இப்படி இருக்கணும்..! ]

அடித்து துன்புறுத்தவில்லை

ஆனால் இந்த விஷயம் ஜெனிபருக்கு தெரியாது. எதற்காக நம்மை புருஷன் இவ்வளவு கேவலமாகவும், இழிவாகவும், மனம் நோகும்படியும் நடந்து கொள்கிறார் என மண்டையை பிடிச்சிக்கிட்டு பல வருஷங்கள் அழுதுக்கிட்டே இருந்திருக்கிறார். இதில் கெட்டிக்காரத்தனம் என்னவென்றால், கணவர் மனைவியை அடித்து துன்புறுத்தவில்லை.

தற்கொலையே முடிவு

தானாகவே கொடுக்ககூடிய டார்ச்சரில் தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்று ஐடியா செய்திருக்கிறார். கிரஹாம் விரும்பியபடியே ஜெனிபர் முடிவெடுத்தார். இப்படி புருஷனிடம் தினம் தினம் சித்ரவதை பட்டுட்டு இருப்பதைவிட செத்தே போயிடலாம் என முடிவுக்கு வந்தார்.

சாக போறீயா? சரி வா...

2014-ம் ஆண்டு, ஜெனரேட்டரை பயன்படுத்தி நான் செத்தே போய்விடுகிறேன் என்று கணவரிடம் ஜெனிபர் சொன்னார். அதற்கு கணவன், "அப்படியா, சாக போறீயா? சரி வா.. நாம பஜார்க்கு போய் ஜெனரேட்டரை வாங்கிட்டு வந்துடலாம்" என்று கூடவே அழைத்து போய் வாங்கி தந்தும் இருக்கிறார். பிறகு அந்த ஜெனரேட்டரை வைத்து எப்படி தற்கொலை செய்து கொள்ளலாம் என அட்வைஸ் தந்திருக்கிறார்.

என்னை உயிர்ப்பிக்காதீர்கள்

ஆனால் இதையெல்லாம் பார்த்து குமுறி குமுறி அழுத ஜெனிபர் தான் சொன்னபடியே இறந்து போய்விட்டார். நவம்பர் மாதம் 30ஆம் தேதி ஜெனிஃபர் பெட்ரோல் ஜெனரேட்டருக்கு அருகில் சடலமாக போலீசார் மீட்டனர். அப்போது அவருக்கு பக்கத்தில் ஒரு லட்டரும் இருந்தது. அந்த கடிதத்தில், "தயவுசெய்து என்னை உயிர்ப்பிக்காதீர்கள்" என்று கடைசியாக எழுதியிருந்தார்.

மதக்குழு தொடங்க திட்டம்

மனைவி இறந்ததும் முகத்தில் கண்ணீர், சோகம் எதுவும் இல்லாமல் இருந்தார் கிரஹாம். சந்தேகத்தின் பேரில் விசாரித்தால், ஆமாம்... அவள் இறந்துவிட்டால் எல்ஐசி பணம் கிடைக்கும். அதை வைத்து ஒரு மதக்குழுவை ஆரம்பிக்க ப்ளான் பண்ணியிருந்தேன்" என்று சொன்னார். இதையடுத்து தற்போது இந்த வழக்கின் தீர்ப்பு வழங்கப்பட்டது. வழக்கை கேட்டு நீதிபதி டேவிஸ் ஆடிப்போய்விட்டார்.

விசித்திர, விநோத வழக்கு

மனைவிக்கு தற்கொலைக்கு ஆலோசனை வழங்கியதற்காக 10 வருஷ சிறைதண்டனையும், தற்கொலைக்கு தூண்டியதாக 6 வருஷ சிறைதண்டனையும் விதிக்கப்பட்டது. இப்படி ஒரு கேஸை தன் வாழ்நாளில் பார்த்ததும், கேள்விப்பட்டதும் இல்லை என்று ஆச்சரியத்துடன் சொன்ன நீதிபதி இதுபோன்ற ஒரு வழக்கு நடப்பது உலகிலேயே இதுதான் முதல்முறை என்றார்.