இரவில் மின்னும் 1000 பிரமாண்ட பூசணிக்காய்கள்!

சிகாகோ: ஹல்லோவென் கொண்டாட்டங்கள் முடிவுக்கு வந்துள்ள நிலையில் அமெரிக்கா உள்ளிட்ட மேலை நாடுகளில் இன்னொரு பிரமாண்ட நிகழ்ச்சி களை கட்டியுள்ளது.

அது தான் 1000 ஜாக் ஓ லன்டர்ன். அது என்ன வாங்க தெரிஞ்சுக்கலாம்.

பாதையோரம் எல்லாம் பூசணிக்காய்கள்:

ஒவ்வொரு வீட்டிலும் ஓன்று நாலுனு பூசணிக்காயை சீவி அதில் முகங்கள் வரைந்து அழகுபடுத்தி லைட் ஏத்தி வீட்டுமுன்ன வச்சி கொண்டாட சிகாகோ பொட்டானிக்கல் கார்டன்ல ஒன்றுல்ல நூறு அல்ல ஆயிரத்துக்கும் மேற்பட்ட பூசணிக்காய்களை அழகு அழகாய் சீவி வரிசையா அந்த தோட்டமெல்லாம் அடுக்கி வச்சிருக்காங்க. காலையில் போனா பூசணிக்காய்கள் பாதையோரம் எல்லாம் உங்களை பார்த்து வரவிற்கிற மாதிரி பார்க்கும் இடமெல்லாம் இருக்கும்.

1000 ஜாக் ஓ லன்டர்ன்ஸ்:

அதில் செதுக்கப்பட்ட முகங்கள் கொஞ்சம் அழகு கொஞ்சம் அகோரம் ஆபிரகாம் லிங்கன் போன்ற பெரிய தலைவர்கள் என்று பலதரப்பட்ட முகங்கள் வரையப்பட்டிருக்கிறது.

இதெற்கென சிறப்பு கலைஞர்கள் நியூயோர்கில் இருந்து வரவழைக்கப்பட்டு ஒவொரு காய்க்கும் பல மணி நேரத்துக்கும் மேலாக செலவிட்டு இதை அழகுபடுத்தி இருக்காங்க. இந்த நிகழ்ச்சிக்குப் பெயர் தான் 1000 ஜாக் ஓ லன்டர்ன்ஸ்.

அழகான ஜாகோலன்டர்ன்கள்:

லன்டர்ன் என்றால் விளக்கு. ஆமாங்க இரவு நேரத்தில் இந்த பெரிய பெரிய பூசணிக்காய்கள் லெட் லைட் வெளிச்சத்தில் விளக்கில் ஒளியேற்றப்பட்டு பூங்காவே வெகு ஜோரா இருக்கு. இந்த அழகான ஜாகோலன்டர்ன்களையும் அந்த தோட்டத்து அழகையும் கண்டு ரசிக்க இந்த 3 நிமிட விடியோவை பாருங்க.

- Inkpena சஹாயா