இலங்கை நாடாளுமன்ற அவை முன்னவராக தினேஷ் குணவர்த்தனே நியமனம்.. ராஜபக்சே கட்சியை சேர்ந்தவர்!

கொழும்பு: இலங்கை அவை முன்னவராக தினேஷ் குணவர்த்தனே பொறுப்பேற்றுள்ளார்.

இலங்கையில் கடந்த சில நாட்களாக அரசியலில் புயல் வீசி வருகிறது. கடந்த மாதம் இறுதியில் இலங்கை பிரதமராக இருந்த ரணிலை அதிபர் சிறிசேனா திடீரென நீக்கிவிட்டார்.

பின்னர் அவருக்கு பதிலாக ராஜபக்சேவை புதிய பிரதமராக சிறிசேனா நியமித்தார். இதற்கு ரணில் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். தான்தான் பிரதமர் என்றும் ரணில் சிறிசேனாவுக்கு கடிதம் எழுதினார்.

இந்நிலையில் பல்வேறு எதிர்ப்புகளை மீறி கடந்த சில நாட்களுக்கு முன்னர் ராஜபக்சே பிரதமராக பொறுப்பேற்றுக் கொண்டார். இதனிடையே கடந்த 3-ஆம் தேதி அவை முன்னவராக ராஜபக்சே கட்சியை சேர்ந்த தினேஷ் குணவர்த்தனே தேர்வானார்.

 

இந்நிலையில் ரணில்தான் பிரதமர் என்றும் பெரும்பான்மையை நிரூபிக்காமல் பிரதமராக ராஜபக்சேவை நியமித்தது சட்டவிரோதம் என்று சபாநாயகர் தினேஷ் ஜெயவர்த்தனே கூறினார்.

தற்போது அவை முன்னவராக தேர்வு செய்யப்பட்ட தினேஷ் குணவர்த்தனே நாடாளுமன்றத்துக்கு சென்று பொறுப்பேற்றுக் கொண்டார். இலங்கை அரசியலில் நாளுக்கு நாள் பதற்றம் நீடித்து வருகிறது.