பிறந்ததும் ரூ. 8,02,065 பரிசாக பெற்ற அமெரிக்கக் குழந்தை... காரணம் 'இந்த'ப் பெயர் தான்!

வாஷிங்டன்: அமெரிக்காவில் ஹார்லாண்ட் ரோஸ் எனப் பெயர் வைக்கப்பட்ட குழந்தைக்கு 11 ஆயிரம் டாலர்களைப் பரிசாக வழங்கியுள்ளது பிரபல உணவு நிறுவனமான கேஎப்சி.

சிக்கன் என்றதும் பலரது நினைவுக்கு டக்கென வருவது கேஎப்சி தான். அந்தளவிற்கு உலகம் முழுவதும் கிளைகளைப் பரப்பி, தன் ருசியால் மக்களைக் கட்டிப் போட்டு வைத்துள்ளது அந்த உணவு நிறுவனம்.

இந்நிலையில் சமீபத்தில் இந்த நிறுவனம் போட்டி ஒன்றை அறிவித்திருந்தது. அதாவது, 'நேம் யுவர் பேபி ஹார்லாண்ட்' என்ற பெயரில் நடத்தப்பட்ட அந்தப் போட்டியின் படி, செப்டம்பர் 9ம் தேதி பிறந்த குழந்தைக்கு அப்பெயர் வைக்கப்பட்டதாக இருக்க வேண்டும். அதோடு ஹார்லாண்ட் என்ற பெயரில் அன்றைய தினம் அமெரிக்காவில் பிறந்த முதல் குழந்தையாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

தங்களது நிறுவனரான சாண்டர்ஸின் பிறந்த தினத்தை ஒட்டி இந்தப் போட்டியை கேஎப்சி ஏற்பாடு செய்திருந்தது. அதன் 11 வகை மூலிகைகளைக் கொண்டு தயாராகும் சிக்கன் ஒன்றை விளம்பரப் படுத்தும் வகையில் 11 ஆயிரம் டாலர்கள் பரிசுத் தொகையாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்தப் போட்டியில், ஹார்லாண்ட் ரோஸ் எனப் பெயரிடப்பட்ட குழந்தை வெற்றி பெற்றது. அக்குழந்தைக்கு கேஎப்சி நிறுவனம் 11 ஆயிரம் டாலர்களைப் பரிசாக வழங்கியுள்ளது. இந்திய மதிப்பில் இந்தப் பரிசுத்தொகை ரூ. 8 லட்சத்து இரண்டாயிரம் ஆகும்.

ஹார்லாண்ட் ரோஸின் பெற்றோர் பெயர் அன்னா பில்சன் மற்றும் டெக்கர் பிலாட் ஆகும். பிறந்தவுடனேயே இவ்வளவு பெரியத் தொகையைப் பரிசாகப் பெற்ற அக்குழந்தைக்கு இணையத்தில் வாழ்த்துக்கள் குவிந்துள்ளன.

 

View image on Twitter

View image on Twitter

KFC@kfc

I’m as pleased as pumpkin punch to announce the winner of our Baby Harland Naming Contest and the Harland who will be ushering in an all-new generation of Harlands, little Harland Rose.

6:49 PM - Oct 30, 2018