இந்தோனேசிய விமான விபத்து.. 189 பேர் பலியாக காரணம் என்ன?.. ஜாவா கடலில் கிடைத்தது பிளாக் பாக்ஸ்

ஜகர்த்தா: ஜாவா கடலில் விழுந்து விபத்திற்கு உள்ளான இந்தோனேசியா விமானத்தின் கருப்பு பெட்டி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்தோனேசியாவை சேர்ந்த லயன் ஏர்லைன்ஸ் விமானம் ஜாவா கடலில் விழுந்து விபத்திற்கு உள்ளானது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. லயன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான ஜேடி610 விமானம்தான் கடலில் விழுந்தது.

கடந்த அக்டோபர் 29ம் தேதி இந்தோனேசியாவின் ஜகர்த்தா நகரில் இருந்து சுமத்ரா தீவில் உள்ள பங்கல் பினாங் நகரம் நோக்கி இந்த விமானம் சென்றது. விமானம் புறப்பட்ட 13 நிமிடம் 23 நொடிகளில் காணாமல் போனது.

மரணம் 
எல்லோரும் மரணம்

அதன்பின் அந்த விமானத்தை தொடர்பு கொள்ள முடியவில்லை. அன்று மாலையே விமானம் ஜாவா கடலில் கண்டெடுக்கப்பட்டது. அந்த விமானத்தில் மொத்தம் 189 பயணிகள் இருந்துள்ளனர். 178‌ பயணிகளப, ஒரு குழந்தை,‌ ‌2 குழந்தைகள், 2 விமானிகள் மற்றும் 6 பணியாளர்கள் இருந்துள்ளனர். விமானத்தில் இருந்த அனைவரும் பலியாகிவிட்டதாக மீட்பு படையினர் அறிவித்துள்ளனர்.

 

தேடினார்கள் 
கடுமையாக தேடினார்கள்

இதுவரை இந்த விபத்தில் பலியானவர்களின் சிலரின் உடல் மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதே சமயம், இந்த விமானத்தின் கருப்பு பெட்டியை (பிளாக் பாக்ஸ்) மீட்பு படை தேடி வந்தது. இந்தோனேசிய கடற்படையின் சிறந்த டைவர்ஸ்கள் எல்லோரும் இந்த கருப்பு பெட்டியை தான் தேடி கொண்டு இருந்தனர்.

 

கண்டுபிடித்தனர் 
கடைசியாக கண்டுபிடித்தனர்

இந்த நிலையில்தான் இன்று காலை அந்த விமானத்தின் கருப்பு பெட்டி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஜாவா கடலில் விமானம் விழுந்த இடத்தில் இருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் கருப்பு பெட்டி கண்டுபிடிக்கப்பட்டது. இந்த கருப்பு பெட்டியின் நிறம் ஆரஞ்சாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

முடியும் 
இனி முடியும்

கருப்பு பெட்டி கிடைத்துள்ளதால் விரைவில் விபத்திற்கான காரணம் தெரியும். ஆனால் இந்த கருப்பு பெட்டி விமானத்தின் டேட்டாக்களை பதிவு செய்யும் பெட்டியா இல்லை விமானிகள் பேசிக்கொள்வதை பதிவு செய்யும் பெட்டியா என்று தகவல் வெளியாகவில்லை. இதை ஆராய்ச்சி செய்ய முடிவெடுத்துள்ளனர் இந்தோனேசிய அதிகாரிகள்.