காணாமல் போன ஒருவரால் வல்லரசு நாடுகளுக்கிடையே போர் பதற்றம்.. பத்திரிக்கையாளர் ஜமால் கொல்லப்பட்டாரா?

பிரபல பத்திரிக்கையாளர் ஜமால் கசோக்கி துருக்கியில் சவுதி அரசாங்கத்தால் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று தகவல்கள் வருகிறது.

இஸ்தான்புல்: பிரபல பத்திரிக்கையாளர் ஜமால் கசோக்கி துருக்கியில் சவுதி அரசாங்கத்தால் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று தகவல்கள் வருகிறது. இந்த கொலையை சவுதி இன்று ஒப்புக்கொள்ளும் என்றும் கூறப்படுகிறது.

உலக நாடுகள் எல்லாம் தேடும் சவுதியை சேர்ந்த பத்திரிக்கையாளர் ஜமால் கசோக்கி காணாமல் போய் இதோடு இரண்டு வாரம் ஆகிவிட்டது. இவர் அமெரிக்காவில் வசித்து வந்தார்.

சவுதியை சேர்ந்த ஜமால் கசோக்கி உலகின் மிக முக்கியமான பத்திரிக்கையாளர்களில் ஒருவர். பின்லேடனை 4க்கும் அதிகமான முறை இவர் பேட்டி எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

என்ன ஆனது

அமெரிக்காவில் வசித்து வந்த இவர் கடந்த செப்டம்பர் 28ம் தேதி துருக்கி வந்துள்ளார். அங்கு இஸ்தான்புல்லில் உள்ள சவுதி தூதரகத்திற்கு இவர் வர வேண்டும் என்று சவுதி அரசு அதிகாரிகள் அழைப்பு விடுத்துள்ளனர். இவர் தனது முதல் மனைவியை விவாகரத்து செய்துள்ளார். அதுகுறித்த ஆவணங்களை கொடுக்க வேண்டும் என்று இவர் அங்கு சென்றுள்ளார்.

காணாமல் போனார்

ஆனால் அவர் எங்கே சென்றார் என்ன ஆனார் என்று தெரியவில்லை. அந்த அலுவலகம் உள்ளே போனவர் வெளியே வரவேயில்லை. கடந்த இரண்டு வாரமாக இவரை உலக நாடுகள் தேடி வருகிறது. இவர் கொல்லப்பட்டு இருக்கலாம் என்றும் செய்திகள் வருகிறது. சவுதி அரசு அனுப்பிய கொலைகார டீம் ஒன்று இவரை கொன்றுள்ளதாக துருக்கி பத்திரிகைகள் எழுதி வருகிறது.

கொல்லப்பட்டாரா

இந்த நிலையில் ஜமால் கொல்லப்பட்டு இருக்கலாம் என்று உறுதியாக தகவல்கள் வருகிறது. இன்றோ நாளையோ இவர் கொல்லப்பட்டதை சவுதி ''ஒப்புக்கொள்ள'' வாய்ப்புள்ளதாக தகவல்கள் வருகிறது. ஏற்கனவே சவுதி மேல் பல சந்தேகங்கள் உலவி வந்த நிலையில், தற்போது அவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று சவுதி அரசு வட்டாரங்கள் பேச தொடங்கிவிட்டது.

எதற்காக

கடந்த சில வருடங்களாக இவர் சவுதிக்கு எதிராக எழுதி வந்தார். முக்கியமாக சவுதி முடி இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எதிராக எழுதி வந்தார். அவரின் தவறான ஆட்சி முறையை குறித்தும் அவரின் பின்னணி குறித்தும் எழுதினார். இதன் காரணமாகவே அவர் அமெரிக்காவிற்கு குடி பெயர்ந்தார்.

எப்படி கொல்லப்பட்டார்

இவரை சவுதியை சேர்ந்த அதிகாரிகள் விசாரணை செய்த போது இப்படி நடந்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. சவுதி இதைத்தான் காரணமாக சொல்ல போவதாக தகவல்கள் வருகிறது. விசாரணை தவறாகி இந்த மரணம் நிகழ்ந்துவிட்டது என்று சவுதி கூற வாய்ப்புள்ளது.