5 ஆண்டுகள்.. 900 முறை.. காமக் கொடூர விக்டர்..

பெண் குழந்தைகளை பலாத்காரம் செய்தவருக்கு 22 வருடங்கள் தண்டனை தரப்பட்டது.

கோம்சோமோல்க் : காமுகன், காமவெறியன்... இப்படியெல்லாம் கூட சொல்ல முடியாது இவரை... இது எல்லாத்துக்கும் மேல ஒரு விசித்திரமான பிராணி, வாழ தகுதியற்ற ஜந்து என்றுதான் சொல்ல வேண்டும்!!

ரஷ்யாவை சேர்ந்தவர் விக்டர் லிஷாவ்ஸ்கி. இவருக்கு வயது 37. இவரது மனைவி பெயர் ஓல்கா. இவர்களுக்கு 3 குழந்தைகள் இருக்கிறார்கள். விக்டர் ஒரு செருப்பு கடையை சொந்தமாக வைத்திருக்கிறார்.

மாநில அரசு உதவி

இதுபோக கைவிடப்பட்ட பிள்ளைகளை தத்தெடுக்கும் ஆர்வம் கொண்டவர் விக்டர். 9 சிறுவர், சிறுமிகளை வளர்த்து வருகிறார். இந்த விஷயத்தில் விக்டருக்கு ஓல்காவும் சப்போர்ட்டாக இருந்து வந்தார். இந்த தம்பதி இப்படி பிள்ளைகளை தத்தெடுப்பதற்காக அவர்களின் மாநில அரசு மாத மாதம் 265 பவுண்டுகள் நிதி தந்து வருகிறார்கள். இதுதான் வெளி உலகத்துக்கு இவ்வளவு காலம் தெரிந்த விஷயம்!

5 ஆண்டுகள்

ஆனால் விக்டரின் தத்தெடுப்புக்கு பின்னால்தான் அவரது சுயரூபம் ஒளிந்து கிடந்தது. விக்டர் வளர்த்துவரும் சிறுமிகளில் பெரும்பாலும் 12 முதல் 17 வயது உடையவர்கள்தான்! இந்த பிள்ளைகளை தானே சோறு போட்டு வளர்த்து, ஆதரித்து, தானே பலாத்காரமும் செய்து வந்திருக்கிறார். இப்படியே 5 ஆண்டுகள் நடந்து வந்திருக்கிறது.

ஓல்காவிடம் முறையீடு

விக்டரின் வெறியாட்டத்தை பொறுக்க முடியாமல் ஒரு சிறுமி மட்டும் துணிந்து ஓல்காவிடம் 5 வருஷமாக நடந்த கொடுமையை எல்லாம் சொல்லிவிட்டார். இதைகேட்ட ஓல்கா கடும் அதிர்ச்சி அடைந்தார். ஆனாலும் விக்டரிடன் சட்டையை பிடித்துக் கொண்டு சண்டையெல்லாம் போடவில்லை. நேராக போலீசுக்கு போய்விட்டார்.

இத்தனை பேரா?

சிறுமிகள் சொன்னதை ஒன்றுவிடாமல் போலீசில் சொன்னார். அதன் அடிப்படையில் போலீசார் விக்டரை கைது செய்து விசாரணையை துவக்கினர். அப்போது விக்டர் கூறியதை கேட்டு போலீசார், ஓல்கா, உட்பட எல்லாருமே ஷாக் ஆனார்கள். அது என்னவென்றால், விக்டர் இத்தனை காலமாக தான் வளர்த்து வந்த சிறுமிகளை 5 ஆண்டுகளில் 900 முறை மிரட்டி கற்பழித்து வந்திருக்கிறார் என்பதுதான்.

22 வருடங்கள்

உடனடியாக விக்டரை கொண்டு போய் கோர்ட்டில் நிறுத்தினார்கள் போலீசார். ரஷ்ய நாட்டின் வரலாற்றிலேயே ஒரு மோசமான குற்றவாளி யார் என்றால் அது விக்டர்தான் என்றார் நீதிபதி. அதோடு 22 வருடங்களுக்கு சிறை தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார்.

அப்பா என்றார்கள்

கோர்ட்டிலேயே கதறி அழுதார் ஓல்கா... 5 வருஷமா எனக்கு இதெல்லாம் தெரியாம போச்சே... இந்த சிறுமிகளில் ஒருத்தர்கூட இவ்வளவு நாளா என்கிட்ட சொல்லாமலே விட்டுட்டாங்களே.. எல்லாருமே விக்டரை தன் அப்பாவாக நினைத்து பழகினார்கள்.. இந்த குழந்தைகளிடம் இப்படி நடந்துகொண்டாரே" என்று கதறினார்.