கடைசில புசுபுசு நாய்களையும் போராட்டத்தில் குதிக்க வச்சுட்டீங்களேய்யா!

நாய்கள் கலந்து கொண்ட பிரம்மாண்டமான பேரணி அனைவரையும் ஈர்த்துள்ளது.

லண்டன்: சொல்லி பார்த்தார்கள்... கேட்டு பார்த்தார்கள்... எதுவும் சரிபட்டு வரல... வேற வழியும் தெரியல...! அதான் இப்படி பேரணிக்கு கிளம்பிட்டாங்க எல்லாரும்!

ஐரோப்பிய யூனியனில் இருந்து இங்கிலாந்து விலகுவது (பிரெக்ஸிட்) குறித்த பொது ஓட்டெடுப்பு கடந்தாண்டு நடந்தது. அதில் 52 சதவீதம் பேர் வெளியேற வேண்டும் என வாக்களித்தனர். இதனால் ஐரோப்பிய யூனியனில் இருந்து விலகுவதாக பிரிட்டன் அறிவித்தது.

நாய்களின் ஓனர்கள்

இரண்டாம் கட்ட வாக்கெடுப்பு நடத்தி ஒருமுறை இதனை உறுதி செய்து கொள்ளலாம் என கூறப்பட்டது. இதனை நடத்தக்கூடாது என்று ஒருசிலர் முடிவு எடுத்தார்கள். முடிவு எடுத்தவர்கள் யார் என்றால் எல்லாருமே நாய் வைத்திருக்க கூடியவர்கள். நாய்களின் ஓனர்கள்!!

பாஸ்போர்ட் இல்லை

இப்படி இஷ்டத்துக்கு வேற நாட்டுக்கு பிரிந்து போய்விட்டால், எங்கள் நாய்கள் எங்களுடன் கூட்டி செல்ல முடியாதே? நாய்களை இங்கேயே விட்டுவிட்டு நாங்கள் மட்டும் ஐரோப்பிய யூனியலிருந்து விலக போகணுமா? நாய்கள் இல்லாமல் நாங்கள் போக மாட்டோம்... ஐரோப்பிய யூனியனில் உள்ள நாடுகள் செல்ல பிராணிகளுக்கு பாஸ்போர்ட் தருவது கிடையாது.

நாய்க்கு சோறு கிடைக்காது

இதனால் அந்த பிராணிகளுக்கான உணவு விலை கூட அதிகமாக உயர்ந்துவிட்டது. இந்த நிலையில் எங்கள் பிராணிகளை விட்டு நாங்கள் எப்படி பிரிந்து செல்வோம்? எங்கள் நாய்கள் எல்லாம் சோறு, தண்ணி இல்லாமல் பாதிக்காதா? எனவே இன்னொரு வாக்கெடுப்பு நடத்தக்கூடாது என்று சொல்லி, தங்கள் வீட்டு நாய்களை அழைத்து கொண்டு நாய்கள் உரிமையாளர்கள் போராட முடிவு செய்தனர்.

நாய்கள் பேரணி

அதற்காக, தாங்கள் வளர்க்கும் பலவகையான நாய்களை அழைத்து வந்து நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி நடத்தினார்கள். நாட்டைவிட்டு பிரிந்து செல்லக்கூடாது என்பதை என்பதை வலியுறுத்தி ஒரேநேரத்தில் ஆயிரக்கணக்கான நாய்கள் நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியாக போயின. கூடவே அந்த நாய்களின் ஓனர்களும் போனார்கள்.

புசுபுசு நாய்கள்

பேரணியில் பங்கேற்ற நாய்கள் எல்லாம் ரொம்ப அழகழகாய் இருந்தது... சில நாய்கள் வினோதமாகவும் இருந்தது. புசுபுசு முடிகளுடன் ஒவ்வொரு நாயும் தனக்கு பக்கத்தில் ஒரு கோரிக்கை பலகையை வைத்து கொண்டு உட்கார்ந்து கொண்டது. இந்த நாய்களின் பேரணியை தற்போது உலக நாடுகளே திரும்பி பார்த்துள்ளன. நாய்களின் அழகில் சொக்கி விழுந்த பலர், இந்த போராட்டத்துக்கு ஆதரவினையும் அதிகமாகவே தர ஆரம்பித்துள்ளனர்