2030 உலக அழிவிற்கு இந்தியாவும் ஒரு காரணமாக இருக்கும்.. திடுக்கிடும் ஐநா அறிக்கை!

உலகம் வெப்பநிலை மாற்றம் காரணமாக அழிவை சந்தித்தால் அதற்கு இந்தியாவும் முக்கிய காரணமாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

நியூயார்க்: உலகம் வெப்பநிலை மாற்றம் காரணமாக அழிவை சந்தித்தால் அதற்கு இந்தியாவும் முக்கிய காரணமாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

ஐநா வெளியிட்டு இருக்கும் அறிக்கையில் இந்த தகவல் அடங்கி உள்ளது. 2030ல் உலகம் மிகப்பெரிய இயற்கை பேரழிவை சந்திக்க வாய்ப்புள்ளதாக ஐநா அமைப்பு தெரிவித்துள்ளது.

ஐநாவின் ''இன்டர்கவர்மெண்டல் பேனல் ஃபார் கிளைமேட் சேஞ்ச் (Intergovernmental Panel for Climate Change)'' அமைப்பு நேற்று இரவு அறிக்கை ஒன்றை வெளியிட்டது. 400 பக்கம் உள்ள அந்த அறிக்கை பல பீதியை கிளப்பி உள்ளது.

தண்ணீரில் மூழ்கி உலகம் அழியும்

மனிதர்கள் தற்போது இருக்கும் வாழ்க்கை முறையை கடைபிடித்தால், 2030ல் கண்டிப்பாக உலகம் நீரில் மூழ்கிவிடும் என்று எச்சரிக்கை விடுத்து இருக்கிறது. பூமியின் வெப்பநிலை வெகுவேகமாக உயரும் என்றும் கூறியுள்ளது. இதனால் ஐஸ் பாறைகள் உருகி பூமி அழியும் என்று கூறப்பட்டுள்ளது.

என்ன மாற்றம்

பூமியின் வெப்பநிலை மாற்றம் அடைவதால் இந்த பிரச்சனை ஏற்படும் என்று அறிக்கையில் கூறப்பட்டு இருக்கிறது. கடந்த 10 வருடங்களில் பூமியின் வெப்பநிலை வேகமாக உயர்ந்துள்ளது. சரியாக 1 டிகிரி செல்ஸியஸ் வெப்பநிலை உயர்ந்து இருக்கிறது. 2030ல் பூமியின் வெப்பநிலை 3.5 டிகிரி செல்ஸியஸ் வரை அதிகரிக்கும் என்று ஐநா கூறியுள்ளது.

இந்தியாவும் காரணம்

இந்த வெப்பநிலை மாற்றத்திற்கு இந்தியாவும் முக்கிய காரணமாக இருக்கும் என்று ஐநா அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த 400 பக்க ஐநா அறிக்கையில், இந்தியாவின் நகரங்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி, இங்கு உயரும் வெப்பநிலை பெரிய அளவிலான மாற்றத்தை உலகிற்கு கொண்டு வரும். இந்திய பெருங்கடலில் ஏற்படும் மாற்றம் பலநாடுகளை பாதிக்கும் என்று கூறப்பட்டு இருக்கிறது.

பெங்களூர் மற்றும் டெல்லி

அதில் பெங்களூர் மற்றும் டெல்லி குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி இரண்டு நகரங்களும் அதிக அளவில் வெப்பநிலை மாற்றத்தை ஏற்படுத்துவதாகவும், இங்குதான் காற்று மாசு அதிகம் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இங்கு ஏற்படும் வெப்பநிலை உயர்வு இந்தியாவின் மொத்த வெப்பநிலையை உயர்த்தும் என்றுள்ளது. இந்த நகரங்களை ''வெப்பமான நகர தீவுகள்'' என்று ஐநா கூறியுள்ளது.

கடல் பகுதி

அதேபோல் கடல்பகுதிக்கு அருகில் உள்ள சென்னையும், அதிக மக்கள் நெரிசல் கொண்ட மும்பையும் பெரிய பாதிப்பை உருவாக்கும் என்று கூறியுள்ளது. இங்கு ஏற்படும் சிறிய வெப்பநிலை மாற்றம் கூட, கடலில் பெரிய மாற்றத்தை உருவாக்கும். இந்திய கடலில் ஏற்படும் இந்த சிறிய மாற்றம், பல நாடுகளில் பெரிய பாதிப்பை உருவாக்கும் என்று ஐநா எச்சரிக்கை விடுத்து இருக்கிறது.

எதனால் இப்படி

இங்கு வெளியாகும் மோசமான காற்றும், கார், பைக், தொழிற்சாலை மாசும்தான் இந்த பிரச்னைக்கு காரணம் என்று கூறியுள்ளது. இந்தியாவில் இதை தடுக்க இதுவரை பெரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று ஐநா கூறி இருக்கிறது. இதன் காரணமாகவே உலக அழிவில் இந்தியாவிற்கும் ஒரு பங்கு இருக்கும் என்பது போல அறிக்கை வெளியிட்டுள்ளது.

எடுத்துக்காட்டுகள்

இதற்கு சில எடுத்துக்காட்டுகள் கூறப்பட்டுள்ளது. கேதார்நாத் வெள்ளம், கேரளா வெள்ளம், மும்பை புயல், சென்னை வெள்ளம் ஆகியவையும் இந்த அறிக்கையில் எடுத்துக்காட்டாக கூறப்பட்டு இருக்கிறது. இது பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.