அமெரிக்காவின் பிரபல காமெடி நடிகை ஆமி ஸ்கூம்பர் கைது..

பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான கவாங்காவை, அமெரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க பரிந்துரைத்ததுக்கு எதிராக போராட்டம் நடத்திய பிரபல காமெடி நடிகை ஆமி ஸ்கூம்பர் கைது செய்யப்பட்டார். மூன்று பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்தாக குற்றச்சாட்டுக்கு ஆளாவனர் கவாங்கா. இவரை அமெரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதியாக செனட் சபை பரிந்துரை செய்துள்ளது. இதற்கு அமெரிக்காவில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. நீதிபதி கவாங்காவுக்கு எதிராக செனட் அலுவலகம் முன்பு நடிகை ஆமி ஸ்கூம்பர், ராடஜ்கோவஸ்கி உள்பட 293 பேர்,போராட்டம் நடத்தினர். இதையடுத்து வாஷிங்டன் டி.சி. போலீசார் கைது செய்தனர்.