சுற்றுலா சென்ற இடத்தில் உற்சாகமாக இளம்பெண்ணின் மஜாஜ் – மறுநாள் காத்திருந்த பேரதிர்ச்சி

இந்தோனேசியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஆஸ்திரேலிய இளைஞர் ஒருவர், உடல் மசாஜ் செய்த மறுநாள் உடல் முழுவதும் சிகப்பு நிறத்திலான கோடுகள் விழுந்திருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.தெற்கு ஆஸ்திரேலியாவை சேர்ந்தவர் மாத்தேவ், இவர் தன்னுடைய மனைவி கேண்டிஸ் ரைஸோன் மற்றும் அவருடைய சகோதரியுடன் இந்தோனேசியாவிற்கு 6 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார் .

அங்கு நீண்ட நாட்களகாவே முதுகுவலி இருப்பதாக கூறி வந்த மாத்தேவ் வலி குறையும் என எண்ணி மசாஜ் செய்ய சென்றுள்ளார்.அங்கு மசாஜ் செய்யும் இளம்பெண் மாத்தேவிற்கு ‘ரெட் டிராகன் ‘ மசாஜ் செய்யலாமா என கேட்டுள்ளார். ஆனால் இதுகுறித்து மாத்தேவிற்கு எதுவும் தெரியாத நிலையில் கேண்டிஸ் என்னுடைய கணவர் எதுவாக இருந்தாலும் முயற்சி செய்வார் என ஆர்வக்கோளாறில் தெரிவித்துள்ளார்.

இந்த வகை மஜாஜ் குவா ஷா என்று அழைக்கப்படுகிறது.இது தசை திசுக்களிலிருந்து அசுத்தங்களை வெளியேற்ற செய்யப்படுகிறது  அதன்படி அவருக்கு மசாஜ் முடிந்த மறுநாள் மாத்தேவின் கழுத்து பகுதியில் இருந்து முதுகு முழுவதும் சிகப்பு நிறத்திலான கோடுகள் விழுந்துள்ளது . இதனால் குடும்பமே பெரும் அதிர்ச்சியில் உறைந்துள்ளது. ஆனால் நாட்கள் ஆக அந்த சிவப்பு இரத்த கோடுகள் மறைந்து விட்டது.

இது போல இந்தோனேசியாவில் பலரும் சரியான பயிற்சி இல்லாமல் மாசாஜ் நிலையங்கள் என்ற பெயரில் பல செயல்களை செய்து வருவதாக அங்கு உள்ள வட்டாரங்கள் தெரிவித்த நிலையில் தற்போது அணைத்து பயிற்சி இல்லாத மசாஜ் நிலையங்களும் எடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.