கனடிய பிரதமரை வியப்பில் ஆழ்த்திய சாதனை பெண். எதற்காக தெரியுமா?

அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற பாகிஸ்தானை சேர்ந்த மாணவி மலாலா கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை சந்தித்து பேசியுள்ளார்.

இச்சந்திப்பு குறித்து டுவிட்டரில் தெரிவித்த ஜஸ்டின், மலாலாவை ஒட்டாவா நகரில் சந்தித்தது மகிழ்ச்சியைத் தருகிறது. ஜி7 நாடுகளின் பாலின சம உரிமை ஆலோசனை குழுமத்தின் வேலைப்பாடுகள் குறித்து, இக்குழுமத்தின் குறிக்கோள்களான பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கான பள்ளிக்கல்வி குறித்தும் கலந்து ஆலோசித்தோம் என பதிவிட்டுள்ளார்

இந்த டுவீட்டுக்கு பதிலளித்துள்ள மலாலா, கனடா வந்தது மிகவும் மகிழ்ச்சியளிப்பதாகவும், தன்னைச் சந்திக்க நேரம் ஒதுக்கியதுக்கும், பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கான பள்ளிக்கல்வி குறித்த முனைப்பிற்கும் பிரதமர் ட்ருடோவுக்கு நன்றி எனத் தெரிவித்துள்ளார்.