கருணாநிதி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய ஸ்காட்லாந்து தம்பதியினர்

சென்னை மெரினா கடற்கரையில் அடக்கம் செய்யப்பட்டுள்ள கலைஞர் கருணாநிதியின் உடலுக்கு ஸ்காட்லாந்தை சேர்ந்த தம்பதியினர் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

உடல்நல குறைவின் காரணமாக சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி கடந்த செவ்வாய்கிழமையன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

ஒட்டுமொத்த தமிழகத்தையே சோகத்தில் ஆழ்த்திய அவரது இறுதி அஞ்சலி நிகழ்வில் ஏராளமான பொதுமக்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் பங்கேற்றனர்.

சென்னை மெரினா கடற்கரையில் அண்ணா சமாதி அருகே அடக்கம் செய்யப்பட்டுள்ள கருணாநிதியின் சமாதியில், திமுகவினருக்கு, பொதுமக்களும் கடந்த நான்கு நாட்களாகவே அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் ஸ்காட்லாந்தில் இருந்து இந்தியாவிற்கு வருகை தந்திருக்கும் தம்பதியினர், கலைஞர் கருணாநிதியின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தியிருக்கும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.