சுவிஸ் தேர்தலில் போட்டியிடும் ஈழத்தமிழர்

சுவிஸின் சூரிச் மாநிலத்தின் Adiswil நகர சபைக்கான தேரதல் எதிர்வரும் 15 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

குறித்த தேர்தலில் SP சோசலிசக்கட்சி சார்பில் ஈழத்து தமிழரான கண்ணதாசன் முத்துத்தம்பி போட்டியிடுகின்றார்.

இந்நிலையில் குறித்த தேர்தலில் கண்ணதாசன் முத்துத்தம்பியை வெற்றிபெறச் செய்து ஈழத்து தமிழர் சார்பில் Adiswil நகர சபைக்கு ஒருவரை தெரிவு செய்ய வேண்டும் என பல தரப்பினராலும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த தேர்தலில் போட்டியிடும் கண்ணதாசன் முத்துதம்பி கடந்த காலங்களில் சுவிஸ் வாழ் மக்களுக்காகவும் சுவிஸில் வாழும் வெளிநாட்டை சேர்ந்தவர்களுக்காகவும் இலங்கை உட்பட அனைத்து வெளிநாட்டு மக்களுக்காகவும் சிறந்த சமூக சேவைகளை மேற்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பல வழிகளிலும் சமூகநலனையே நோக்காக கொண்டு சுவிஸ்நாட்டு மக்களோடு நல்லுறவைபோணும் அதே நேரத்தில் ஈழத்தமிழர்களுக்காகவும் உழைக்கும் கண்ணதாசன் முத்துத்தம்பியை வெற்றிபெற செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

டியொடரண்ட் உபயோகம் என்ன தீங்கு விளைவிக்கும்?  வீடியோ