மைக்ரோசாஃப்ட் ஆரம்பிப்பதற்கு முன் பில்கேட்ஸின் வாழ்க்கை எப்படியிருந்தது

மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தை நிறுவியரும் உலகின் பணக்காரருமான பில் கேட்ஸ் குறித்து சில சுவாரஸ்யத் தகவல்கள்

இன்றைய யுகத்தினருக்கு மிகவும் பரிச்சியமான ஒன்று என்றால் கணினி. நடக்க ஆரம்பிக்காத குழந்தைகள் கூட கணினி உட்பட பல தொழில்நுட்ப உபகரணங்களை பயன்படுத்த தெரிந்திருக்கிறார்கள்.

இதற்கெல்லாம் அடித்தளமாக இருப்பது மைக்ரோசாஃப்ட். 1975 ஆம் ஆண்டு இதே நாளில் ஆரம்பிக்கப்பட்டது தான் மைக்ரோசஃப்ட் நிறுவனம் இன்று பல பரிணாமங்களைப் பெற்று உலகின் முதன்மை நிறுவனமாக உயர்ந்து நிற்கிறது அதன் நிறுவனர் பில் கேட்ஸ் உலக பணக்காரர்கள் வரிசையில் முன்னணியில் இருக்கிறார். பில் கேட்ஸ் பலருக்கும் முன்னோடி என்று கூட சொல்லலாம். அவரைப் பற்றியும் அவரது மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தைப் பற்றியும் சில ஸ்வாரஸ்யத் தகவல்களை தெரிந்து கொள்ளலாம்.

பிறப்பு :

1955 ஆம் ஆண்டு அக்டோபர் 28 ஆம் தேதி வாசிங்டனில் பிறக்கிறார் பில். இவரது முழுப்பெயர் வில்லியம் ஹென்சி பில் கேட்ஸ். மகன் நன்றாக படித்து வக்கீலாக வேண்டும் என்று பெற்றோர் நினைக்கிறார்கள்.

மகனைப் புகழ்ப்பெற்ற லேக்சைட் ஸ்கூல் என்ற பள்ளியில் சேர்க்கிறார்கள் .

ஆர்வம் :

மகனுக்கோ கணினிகள் மீது தீரா ஆர்வம். பதிமூன்று வயதிலேயே கம்ப்யூட்டர் ப்ரோக்கிராம் எழுத ஆரம்பித்துவிட்டார். கல்வியிலும் சிறந்து விளங்கினார். கணக்கு மற்றும் அறிவியல் அவருக்கு மிகவும் பிடித்தமான பாடங்களாக இருந்தது.

நல்ல நண்பன் :

இவரை விட இரண்டு வயது மூத்தவரான பால் ஆலெனின் நட்பு கிடைக்கிறது. ஓய்வு நேரங்களில் இருவரும் கம்ப்யூட்டர் ப்ரோக்கிராம் குறித்தே சிந்திக்கிறார்கள்,விவாதிக்கிறார்கள்.

பள்ளியில் அப்போது டெலிடைப் கணினி தான் இருந்திருக்கிறது. அதனை பயன்படுத்த வேண்டுமென்றால் தனியாக கட்டணம் செலுத்த வேண்டும்.

வெளியேற்றம் :

முதலில் கட்டணம் செலுத்தி பயன்படுத்திய பில், தன்னிடம் மேற்கொண்டு செலுத்த பணம் இல்லை என்ற சூழல் வரும் போது அந்த கணினியையே ஹேக் செய்து கட்டணமில்லாமல் பயன்படுத்த ஏதுவாக ப்ரோகிராம் எழுதி செட்டிங்க்ஸை மாற்றிக் கொள்கிறார்.

இதனைக் கண்டுபிடித்த பள்ளி நிர்வாகம் பில் கேட்ஸை பள்ளியிலிருந்து வெளியேற்றுகிறது.

மீண்டும் பள்ளி :

பில் கேட்ஸ் இந்த வயதிலேயே கணினியில் புகுந்து விளையாடுகிறான் என்றால் அவனிடம் தனியாக வேறு எதோ திறமை ஒளிந்திருக்கிறது என்பதை உணர்ந்த ஆசிரியர்கள் மீண்டும் பள்ளியில் சேர்த்துக் கொள்கிறார்கள்.

இப்போது அவர்களே பள்ளிக்குத் தேவையான வகையில் கணினியில் ப்ரோக்கிராம் செய்து கொடுக்கச் சொல்லி கேட்கிறார்கள்.

ஹார்ட்வேர்ட் :

ஆர்வம் கொண்ட கணினித் துறையா அல்லது வீட்டில் சொல்லுகிற வக்கீல் படிப்பையா படிக்க என்று எந்த முடிவும் இல்லாமல் ஹார்வேர்ட் பல்கலைக்கழகத்தில் சேருகிறார்.

அங்கே பாப்புலர் எலக்ட்ரானிக்ஸ் என்ற பத்திரிக்கையில் புதிதாக அறிமுகம் செய்யவிருக்கும் Altair 8800 mini-computer குறித்த விளம்பரத்தை பார்க்கிறார். உடன் அவர்களை தொடர்பு கொண்டு தான் கம்ப்யூட்டர் ப்ரோக்கிராம் எல்லாம் எழுதுவேன் என்றும் நீங்கள் வாங்கிக் கொள்வதாக இருந்தால் உங்களுக்கும் எழுதித்தருவேன் என்றும் சொல்கிறார்.

ஆரம்பமே..... :

புதிய மாடல் கம்ப்யூட்டர் அறிமுகப்படுத்தப்பட்ட காலம், அதனை பயன்படுத்துபவர்களே மிகவும் குறைவாக இருந்தார்கள் ஆனால் ஏகப்பட்ட கிராக்கி எதிர்காலத்தில் ஏற்படும் என்பதை அந்த நிறுவனம் முன்னரே அறிந்து களத்தில் இறங்கியிருந்தது.

இந்த சூழலில் ஒருவன் தானாக முன் வந்து கம்யூட்டர் ப்ரோக்கிராம் எழுதித்தருகிறேன் என்று சொன்னால் சும்மா விடுவார்களா? நாங்கள் அதனை வாங்கிக் கொள்கிறோம் என்று சொல்லிவிட்டார்கள்.

தீவிர முயற்சி :

நண்பன் பால் ஆலெனிடம் இந்த விஷயத்தை சொல்கிறார். இருவரும் இணைந்து தீவிரமாக வேலையை ஆரம்பிக்கிறார்கள். பல்கலைக்கழகத்தில் தான் கணினி இருந்தது என்பதால் இரவு பகலாக பல்கலைக்கழகத்திலேயே உட்கார்ந்து கோடிங் எழுதினார் பில்.

டியொடரண்ட் உபயோகம் என்ன தீங்கு விளைவிக்கும்?  வீடியோ