திட்டமிட்ட சதி கர்ப்பிணி பெண்ணை கொன்று குழந்தையை கடத்தி சென்ற இளம்பெண்

மெக்சிகோவில் கர்ப்பிணி பெண்ணை கொன்று குழந்தையை கடத்தி சென்ற இளம்பெண் கைது செய்யப்பட்டுள்ளார் .

மெக்சிகோ நாட்டில் நிறைமாத கர்ப்பிணியான ஜெசிகா கேபரிலா இளம் பெண்ணுக்கு சமூக வலைதளம் வாயிலாக சிந்தியா ஃபாத்திமா என்ற பெண்மணி ஒருவரின் நட்பு கிடைத்துள்ளது.

நன்கு நெருங்கி பழகிய சிந்தியா சம்பவத்தன்று ஜெசிகாவை தமது குடியிருப்புக்கு அழைத்துள்ளார்.மேலும் பிறக்கவிருக்கும் குழந்தைக்கு அன்பளிப்பாக உடைகள் தருவதாக கூறி அழைத்துள்ளார். நன்கு நெருங்கி பழகியதால் ஜெசிகாவும் சிந்தியாவை நம்பி அவரது குடியிருப்புக்கு சென்றுள்ளார்.

 

 

தமது குடியிருப்புக்கு ஜெசிக்காவை வரவழைத்த சிந்தியா அவரது கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார்.பின்னர் அவரது வயிற்றை கிழித்து குழந்தையை வெளியே எடுத்துள்ளார்.பின்னர் ஜெசிகாவின் உடலை அவரது குடியிருப்பிலே ஒரு அறையிலேயே மறைத்து வைத்து உள்ளார்

சிந்தியாவின் கணவர் வேலையின் காரணமாக நாட்டின் வேறு ஒரு பகுதியில் தங்கியுள்ளார். இந்நிலையில் கர்ப்பமாக இருந்த சிந்தியாவுக்கு குழந்தை இறந்தே பிறந்துள்ளது . கணவரிடம் இதை மறைத்த சிந்தியா, ஜெசிகாவின் குழந்தையை பறிக்க திட்டமிட்டு சமூக வலைத்தளம் மூலமாக நட்பு கொண்டு அவரையும் கொலை செய்து குழந்தையை கைப்பற்றியுள்ளார் . 
அதுமட்டுமில்லாமல் ஜெசிகாவின் நட்புக்கு முன்னர் சிந்தியா பலமுறை சமூக வலைதளத்தில் கர்ப்பிணி பெண்களின் நட்பு கோரியுள்ளதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

டியொடரண்ட் உபயோகம் என்ன தீங்கு விளைவிக்கும்?  வீடியோ