நெல்சன் மண்டேலாவின் மனைவி வின்னி மண்டேலா காலமானார்

கேப்டவுன்: தென்னாப்பிரிக்க முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலாவின் மனைவி வின்னி மண்டேலா காலமானார்.

81 வயது நிரம்பிய இவர் நெல்சன் மண்டேலாவுடன் பல போராட்டங்களில் கலந்து கொண்டவர். கருப்பின மக்களின் விடுதலைக்காக நிறைய முறை குரல் கொடுத்தவர்.

அதேபோல் நெல்சன் மண்டேலா தலைமையில் அமைந்த ஆட்சியில் பல முக்கிய அரசு பதவிகளை வகித்துள்ளார். நெல்சன் மண்டேலாவின் கருத்துக்களை, அவர் 27 வருடம் ஜெயிலில் இருக்கும் போது வெளியில் எடுத்து சென்றது இவர்தான்.

ஆனால் கடைசி நாட்களில் இவர் மீது அரசியல் ரீதியாக, கொள்கை ரீதியாக நிறைய விமர்சனங்கள் வைக்கப்பட்டது.

இந்த நிலையில் தற்போது இவர் வயது முதிர்ச்சி காரணமாக அவருடைய வீட்டில் மரணம் அடைந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்து இருக்கிறார்கள்.

டியொடரண்ட் உபயோகம் என்ன தீங்கு விளைவிக்கும்?  வீடியோ