85 கோடி செலவில் கொசுவை கொல்லும் நவீன எந்திரம் சீனாவின் புதிய திட்டம் எப்படி செயல்படுகிறது

பெய்ஜிங்: சீனாவில் ரூ.85 கோடி செலவில் கொசுவை கொல்லும் நவீன எந்திரம் கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது. இதற்கான அந்த நாட்டு விஞ்ஞானிகள் மிகவும் கடுமையாக உழைத்து இருக்கிறார்கள்.

ராணுவ பாதுகாப்பில் பயன்படும் ரேடார் தொழில்நுட்பத்தை அந்நாட்டு விஞ்ஞானிகள் இதிலும் பயன்படுத்தி இருக்கிறார்கள். உலகம் முழுக்க நாளுக்கு நாள் கொசுக்களின் தொல்லை அதிகரித்துக் கொண்டே வருகிறது.

சீனாவிலும் கொசுக்களின் தொல்லை மிகவும் அதிகம் இருப்பதால் இந்த புதிய கண்டுபிடிப்பு நிகழ்த்தப்பட்டுள்ளது. இந்த வருடம் மே மாதத்தில் இருந்து இந்த எந்திரம் பயன்பாட்டிற்கு வரும்.

3 வருடம் 
பெரிய உழைப்பு

இந்த கண்டுபிடிப்பிற்கு பின் பெரிய உழைப்பு இருக்கிறது. சீனாவில் இருக்கும் பெய்ஜிங் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னலாஜியில் உள்ள விஞ்ஞானிகள் இந்த கண்டுபிடிப்பை நிகழ்த்தி இருக்கிறார்கள். பல்வேறு ஆராய்ச்சிகளுக்கு பிறகு, 3 வருடம் உழைத்து இதை கண்டுபிடித்துள்ளார்கள்.

 

எவ்வளவு செலவு 
செலவு

இதற்காக அந்நாட்டு அரசு எவ்வளவு தொகை வேண்டுமானாலும் செலவு செய்ய தயார் என்று பட்ஜெட்டின் போது குறிப்பிட்டு இருக்கிறது. அந்த அளவிற்கு சீனர்களுக்கு கொசுக்கள் மீது பயம். இதனால் தற்போது வரை இதன் கண்டுபிடிப்பிற்கு 85 கோடி ரூபாய் வரை செலவு செய்யப்பட்டு இருக்கிறது.

 

எப்படி 
எப்படி செயல்படும்

இது ரேடார் தொழில்நுட்பம் மூலம் செயல்படுகிறது. ரேடார் தொழில்நுட்பம் வானத்தில் எப்படி விமானம் செல்வதை கண்டுபிடிக்குமோ அதே போல இது சிறிய பொருட்கள் பறப்பதை கூட கண்டுபிடிக்கும் திறன் கொண்டது. இதனால் 20 மீட்டர் தூரத்தில் இருக்கும் கொசுக்களை கூட கண்டுபிடித்து வீழ்த்த முடியும்.

 

என்ன தொழில்நுட்பம் 
என்ன திட்டம்

இந்த கருவி கொசுக்களை சுட்டு வீழ்த்தும் சிறிய கருவி ஆகும். பார்க்க சிறிய ஆண்டெனா போலவே இருக்கும். இதில் இருந்து வரும் சிறிய நெருப்பு பொறி கொசுக்களை சுட்டு வீழ்த்தும். இதை வீட்டில் வைத்து கூட நாம் பயன்படுத்தலாம். ஆனால் இதன் விலை என்ன என்று இன்னும் கூறப்படவில்லை. இந்த கருவி கொசுக்களை சுட்டு வீழ்த்தும் சிறிய கருவி ஆகும். பார்க்க சிறிய ஆண்டெனா போலவே இருக்கும். இதில் இருந்து வரும் சிறிய நெருப்பு பொறி கொசுக்களை சுட்டு வீழ்த்தும். இதை வீட்டில் வைத்து கூட நாம் பயன்படுத்தலாம். ஆனால் இதன் விலை என்ன என்று இன்னும் கூறப்படவில்லை.

 

டியொடரண்ட் உபயோகம் என்ன தீங்கு விளைவிக்கும்?  வீடியோ