உலகை நோக்கி வந்த ஆபத்து விலகியது அடுத்து என்ன நிகழும் அமெரிக்க சற்று முன் வெளியிட்ட தகவல்

விண்வெளியில் சுற்றிக் கொண்டிருந்த சீனாவின் செயல் இழந்த விண்வெளி ஆய்வு மையம் டியான்காங்-1 தென் பசும்பிக் கடலில் விழுந்துள்ளது.

சீனா 2011-ம் ஆண்டு  "டியான்காங்-௧" என்ற விண்வெளி நிலையத்தை லாங் மார்ச் 2 எப்/ஜி ராக்கெட் மூலம் விண்ணிற்க்கு அனுப்பப்பட்டது. இதுதான் சீனாவின் முதல் விண்வெளி ஆய்வுக்கூடம் ஆகும்.

இந்த விண்வெளி மையம் பணிகளை  2013-ம் ஆண்டு முடித்துக்கொண்டது. அதன் ஆயுட்காலம் 2 ஆண்டுகள் நீட்டிக்கப்பட்டது. இந்த நிலையில் ‘டியான்காங்-1’ தனது பணிகளை முடித்துக்கொண்டு செயலற்றுப்போய் விட்டது என சீனா, கடந்த 2016-ம் ஆண்டு மார்ச் மாதம் அறிவித்திருந்தது.

இன்று அமெரிக்க பகுதியில் விழலாம் என்று கூறப்பட்டதால், அமெரிக்காவின் மிச்சிகன் லோயர் தீபகற்ப பகுதியில் அவசர கால குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன. முன் எச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு உள்ளன.

விண்வெளி நிலையத்தின் பாகங்கள், பூமியின் காற்று மண்டலத்துக்குள் நுழைந்தாலும், அதன் பெரும்பாலான பகுதிகள் தரையில் வந்து விழாமல் வழியிலேயே விண்வெளி நிலையத்தின் எரிபொருளுடன் சேர்ந்து எரிந்து விடும்.

எனவே மிகச்சிறிய அளவில்தான் அதன் பாகங்கள் பூமியின் மேற்பரப்பில் வந்து விழும். இதனால் பெரிய அளவுக்கு பாதிப்பு ஏற்படாது என்று கூறப்பட்ட நிலையில், சற்று முன்னர் பூமியின் காற்று மண்டலத்திற்குள் நுழைந்து உராய்வு விசையின் காரணமாக கனரக வாகனத்தை விட சிறிய அளவில் எரிந்த போய், தென் பசும்பிக் கடலில் விழுந்துள்ளது.

டியொடரண்ட் உபயோகம் என்ன தீங்கு விளைவிக்கும்?  வீடியோ