இம்ரான் கான் மீது ஷூ வீச்சு

பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரரும் பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் என்ற கட்சியின் தலைவருமான இம்ரான் கான்.இவர் பாகிஸ்தானின் பாஞ்சாப் மாநிலத்தில் தனது கட்சி சார்பில் நடந்த பேரணியில் கலந்து கொண்டார். ஊர்வலத்தின் இடையில் வாகனத்தில் இருந்து உரையாற்ற மைக்கில் பேச முற்பட்ட போது திடீரென அவர் மீது ஷூ வீசப்பட்டது. அந்த ஷூ அவருக்கு அருகில் நின்றுகொண்டிருந்த அலீம் கான் மீது பட்டது.

இதையடுத்து, இம்ரான் கான் தனது பேச்சை சீக்கிரமாக முடித்துக் கொண்டு அங்கிருந்து புறப்பட்டார். ஷூ வீசிய நபரை அங்கிருந்தவர்கள் பிடிக்க முற்பட்டனர். ஆனால் அதிக கூட்டம் காரணமாக அவரை பிடிக்க முடியவில்லை.அந்த நபர் தப்பி சென்று விட்டார்.