சிரியாவில் 20 நாட்கள் நடைபெற்ற யுத்தத்தில் இத்தனை கொலையா

சிரியாவில் உள்நாட்டு போர் ஆரம்பமாகி 20 நாட்கள் கடந்துள்ளன.

 

 

சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் வசமிருந்த கிழக்கு கவுட்டா பகுதியை முழுமையாக மீட்டெடுப்பதற்கான அதிபர் பஷார் அல் ஆசாத் படைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. இத் தாக்குதல் ஆரம்பித்து 20 நாட்களை எட்டியுள்ளது.

 

 

இதனடிப்படையில் நடைபெற்ற 20 நாட்கள் நடைபெற்ற யுத்தத்தில் 219 குழந்தைகள் உட்பட, 1 ஆயிரத்து 31 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 4 ஆயிரத்து 350 பேர் படுகாயமடைந்துள்ளதாக, சிரியா மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. மேலும் தாக்குதல்கள் நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.