65 லட்சத்தைப் பாம்பு சாப்பிட்டுட்டு காணாமல் போன பணத்திற்கு வித்தியாசமாக கணக்கு காட்டிய பெண்

அபுஜா: நைஜீரிய தலைநகர் அபுஜாவில் இந்தச் சம்பவம் நடந்து இருக்கிறது. அங்குத் தேர்வு எழுதக் கட்டணம் வாங்கும் பெண் அதிகாரி பிலோமினா செய்சி இந்தக் காரணத்தை தெரிவித்துள்ளார்.

கணக்கில் வராத பணம் எங்கே என்று கேட்டதற்கு அதைப் பாம்பு தின்றுவிட்டதாகக் கூறியுள்ளார். மொத்தம் 65 லட்சம் ரூபாய் பணத்தை பாம்பு தின்றுவிட்டதாக கூறியுள்ளார்.

இதுகுறித்து தற்போது விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இது சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி உள்ளது.

நீக்கம் 
பணியில் இருந்து நீக்கம்

அவர் கூறிய காரணத்தை அந்நாட்டு அரசு ஏற்றுக்கொள்ளவில்லை. மேலும் அந்தப் பெண்ணை பணியில் இருந்து நீக்கி இருக்கிறார்கள். அதேபோல் அந்தப் பெண்ணை கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.

 

வைரல் 
கணக்கு

இது மிகவும் வைரல் ஆகியுள்ளது. இவர் ''அந்தப் பாம்பு எப்படி இத்தனை பணத்தைத் தின்று இருக்கும் என்று கூறுங்கள் சரியாகக் கூறினால் 100 மதிப்பெண்கள். அந்தப் பாம்பு எப்படி உயிரோடு இருந்திருக்கும்'' என்று கேட்டு இருக்கிறார்.


ஊழல் 
ஊழலுக்கு எதிரான அமைப்பு

இந்த நிலையில் நைஜீரியாவில் இருக்கும் ஊழலுக்கு எதிரான அரசு அமைப்பு இதுகுறித்து காமெடியாக போஸ்ட் போட்டு இருக்கிறார்கள். அந்தப் பாம்பிற்கு இரக்கமே காட்ட கூடாது என்று குறிப்பிட்டு இருக்கிறார்கள்.


ஊரைவிட்டு 
போறேன் போங்க

இவர் இந்தப் பொய்யை கேட்க முடியாமல் ''அட போங்க நான் இந்த ஊரை விட்டே போறேன்'' என்று புகைப்படம் போட்டு இருக்கிறார்.