பிரபலத்தின் மருமகள் சாதாரண தபால் தானே என்று பிரிக்கப் போய் மூன்று பேர் கவலைக்கிடமான நிலை

சாதாரண தபால் தானே என்று பிரிக்க போய் இன்று மூன்று பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கின்றனர்.

தற்போது அமெரிக்க அதிபராக இருப்பவர்டெனால்டு டிரம்ப். இவரின் மூத்த மகனின் பெயர் டெனால்டு ஜூனியர்.

இவரது மனைவியான  வெனிசா அமெரிக்காவில் மன்ஹாட்டன் நகரில் வசித்து வருகிறார். இவரது வீட்டிற்கு ஒரு தபால் வந்திருக்கிறது.

இதனை வெனிசா பிரித்து பார்க்க முயற்சித்த பொழுது திடீரெ மூச்சு திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்திருக்கிறார்.

கவரை பிரித்த சிறிது நேரத்திலேயே வெனிசாவை தொடர்ந்து அவரின் தயார் மற்றும் வீட்டு வேலையாள் என்று அடுத்தடுத்து பாதிக்கப்பட்டனர்.

பாதுகாவலர்களின் உதவியோடு இவர்கள் மூவரும், உடனடியாக நியூயார்க் நகரில் உள்ள மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

உயிராபத்தான நிலையில் இருக்கும் மூவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அந்த தபாலில் வந்தது ஒரு வேளை விஷ கிருமியாக இருக்கலாமோ, என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

ஆந்த்ராக்ஸ் போன்ற கொடிய விஷக்கிருமியை பரப்பும் பவுடராக இருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பான விசாரணைகளை காவல் துறையினர் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றன