2050ல் சூரியனின் வெப்பக்கதிர்வீச்சு குறைந்த அளவாக இருக்கும் ஆய்வாளர்கள் தகவல்

கலிஃபோர்னியா: சூரியனின் வெப்பக்கதிர்வீச்சு 2050ம் ஆண்டுகளில் குறைந்தபட்ச அளவுக்கு செல்லும் என எதிர்பார்க்கபடுவதாக அறிவியல் அறிஞர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் புவி வெப்பமயமாதல் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும் எனவும் கருதுகின்றனர். இதுபோன்ற ஒரு நிலை ஏற்பட்டு தேம்ஸ் நதி அடிக்கடி உறைந்ததாக கூறப்படுகிறது. மேலும் இந்த காலகட்டத்தில் தான் பால்டிக் கடல் உறைந்தது அப்போது கடற்பரப்பின் மீது சுவீடன் படைகள் அணிவகுத்துச் சென்று 1658ம் ஆண்டு டென்மார்க்கின் மீது படையெடுத்ததாகவும் வரலாற்றுக் குறிப்புகள் உள்ளதாக அறிஞர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில் சூரியனில் ஏற்படும் ஆற்றல் சுழற்சிகளின் அடிப்படையில் 2050ம் ஆண்டுகளில் சூரியனின் வெப்பக்கதிர்வீச்சு குறைந்தபட்ச அளவாக இருக்கும் என கலிஃபோர்னியா பல்கலைக்கழக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். எனவே இது புவி வெப்பமயமாதல் பிரச்சனைக்கு தீர்வாக அமையலாம் என சில அறிவியல் அறிஞர்கள் கருதுகின்றனர்.