சீனாவில் புதிதாக தயாரிக்கப்பட்ட ஜே-20வகைப் போர் விமானங்கள் சீன விமானப்படையில் சேர்ப்பு

பிஜிங்: சீனாவில் புதிதாக தயாரிக்கப்பட்ட ஜே-20வகைப் போர் விமானங்கள் சீன விமானப்படையில் சேர்க்கப்பட்டுள்ளது. மேலும் சேர்க்கப்பட்ட ஜே- 20வகைப் போர் விமானங்கள் போருக்குத் தயாராக இருப்பதாக சீன ராணுவம் தெரிவித்துள்ளது. சீனா அதன் விமானப்படைக்காகவே ஜே-20 வகைப் போர் விமானங்களைத் தயாரித்துள்ளது. 

இதன் சிறப்பு அம்சங்கள் எதிரிகளின் தரை இலக்குகளைக் குண்டுவீசித் தாக்கவும், வானில் போர்விமானங்கள், ஏவுகணைகள் ஆகியவற்றை தாக்கவும் பயன்படுத்தப்படுகிறது. 2016ம் ஆண்டு நவம்பர் மாதம் சுகாயில் நடைபெற்ற விமானக் கண்காட்சியில் முதன்முறையாக இடம்பெற்ற ஜே- 20வகைப் போர் விமானம், இப்போது விமானப் படையில் சேர்க்கப்பட்டு போருக்குத் தயாராக இருப்பதாக சீன மக்கள் ராணுவத்தின் இணையத்தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.