மரணத்தின் விளிம்பில் இருந்தவரை திருமணம் செய்த ஜூலி

அமெரிக்காவில் உள்ள வில்லியம் ஸ்போட் என்பவர் இரு சிறுநீரகங்களும் இழந்து மரணத்தின் விளிம்பில் இருந்த நிலையில் அவருடைய முன்னாள் காதலி அவரை திருமணம் செய்த நிகழ்ச்சி ஒன்று நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வில்லியம் மற்றும் ஜூலி ஆகிய இருவரும் பல ஆண்டுகளுக்கு முன் காதலர்களாக இருந்தனர். ஆனால் சந்தர்ப்பவசத்தால் காதல் முறிவு ஏற்பட்டு ஜூலி வேறொருவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால் இந்த திருமணம் நீண்ட நாள் நீடிக்காததால் கணவரை விவாகரத்து செய்துவிட்டு ஜூலி தனிமையில் வாழ்ந்து வந்தார்

இந்த நிலையில் தனது முன்னாள் காதலர் வில்லியம்ஸ் உயிருக்கு போராடுவதாக செய்தி அறிந்து அவரை பார்க்க சென்றார். அவரை பார்த்ததும் புத்துணர்வு அடைந்த வில்லியம், அவரை திருமணம் செய்ய விரும்புவதாக தனது கடைசி ஆசையை தெரிவித்தார்.

அதற்கு ஜூலியும் சம்மதம் தெரிவித்தார். இதையடுத்து திருமண ஏற்பாடுகள் நடந்தன. டொனால்டுஜெட் படுக்கையில் இருந்த நிலையிலேயே அவர்கள் திருமணம் நடந்தது.

உறவினர்களும், ஆஸ்பத்திரி ஊழியர்களும் அவர்களை வாழ்த்தினார்கள்.