பாகிஸ்தானுக்கு அளித்த பதிலடியில் பெண் ஒருவர் பலி

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அடிக்கடி அத்துமீறிய தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதற்கு இந்திய வீரர்களும் தகுந்த பதிலடி அளித்து வருகின்றனர். இதனால் இரு தரப்புக்கும் இடையே அடிக்கடி மோதல் நிகழ்ந்து வருகிறது.

இவ்வாறு நேற்று முன்தினம் இந்திய வீரர்கள் அளித்த பதிலடியில் பாகிஸ்தானின் பீர் கானா பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரியவருகிறது.

இந்த நிலையில் பாகிஸ்தான் அதிகாரிகள் கடும் அதிர்ச்சியடைந்தனர். இதைத்தொடர்ந்து இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய பொறுப்பு துணை தூதரை நேரில் அழைத்து பாகிஸ்தான் அரசு கண்டனம் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் வெளியுறவுத்துறையில் தெற்கு ஆசியா மற்றும் சார்க் நாடுகளுக்கான இயக்குனராக பணியாற்றி வரும் முகமது பைசல் இந்த கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.

எல்லையில் இரு தரப்பும் கட்டுப்பாடுடன் நடந்து கொள்ள வேண்டும் என வலியுறுத்திய போதும் இந்தியா தொடர்ந்து எல்லை தாண்டிய தாக்குதல்களை நிகழ்த்துவதாக பாகிஸ்தான் அரசு குற்றம் சாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது..

இன்னும் சென்னையில் இதில் விவேகம் தான் நம்பர் 1, மெர்சல் இல்லை டாப் 5 பாக்ஸ் ஆபிஸ் லிஸ்ட் இதோ