வடகொரியா மீது அழுத்தங்களை அதிகரிப்பதற்கு ஜப்பான் எஸ்தோனியா இணக்கம்

வடகொரியா மீது அழுத்தங்களை அதிகரிப்பதற்கு ஜப்பான் மற்றும் எஸ்தோனிய அரசாங்கங்கள் இணங்கியுள்ளதாக ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே தெரிவித்துள்ளார்.

நேற்று வெள்ளிக்கிழமை எஸ்தோனிய பிரதமருடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னரே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், வடகொரியாவின் அணு ஆயுத நடவடிக்கைகளை நாம் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என தெரிவித்துள்ளார்.

அத்துடன் வடகொரியா மீது அழுத்தங்களை பிரயோகிப்பது அவசியமாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை. இது தொடர்பில் கருத்து தெரிவித்த எஸ்தோனிய பிரதமர், ஜப்பானும், எஸ்தோனியாவும் பல கிலோமீற்றர்களால் பிரிக்கப்பட்டுள்ள போதிலும், ஒரு வலுவான டிஜிட்டல் தொழில்நுட்பம் மூலம் இணைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

கிழிந்தது வைரமுத்துவின் முகத்திரை ஆண்டாள் ஒரு தேவதாசி என்று காட்டிய அமெரிக்க ஆதாரம் பொய்