சவூதி அரேபியாவின் வயதான மனிதர் 147 வயதில் காலமானார்

சவூதி அரேபியாவின் வயதான மனிதர் தன்னுடைய 147 வயதில் காலமாகியுள்ள சம்பவம் அனைவருக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

சவூதி அரேபியாவின் அப்ஹா நகரில் வசித்து வந்தவர் ஷேக் அலி அல் அலாக்மி (147). இவர் கடந்த வார இறுதியில் மூளைசாவின் காரணமாக உயிரிழந்துள்ளார். அதுவரை நல்ல உடல் நலத்துடன் ஆரோக்கியமாக இருந்துள்ள சம்பவம் அனைவருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

அவரின் ஆரோக்கியம் மற்றும் உடல்திடம் குறித்து அவரது குடும்ப உறுப்பினர்கள் கூறுகையில், ஷேக் அலி இயற்கையான உணவுகளையே பெரும்பாலும் விரும்பி உண்ணுவார். அவர் பதப்படுத்தப்பட்ட உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்ள மாட்டார். பண்ணைகளிலிருந்து வரும் இறைச்சிகளையே உண்பார். கார்களில் அதிகம் செல்ல மாட்டார். எவ்வளவு தூரமாக இருந்தாலும் நடந்தே செல்வார். ஒருமுறை சொந்த வீட்டிலிருந்து 600கிமீ தொலைவில் உள்ள மெக்காவிற்கு நடந்தே சென்றதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

கலகலப்பு 2 பிரஸ் மீட்டில் ஜெய் பற்றி மனம் திறந்த சுந்தர் சி