விக்கி லீக்ஸ் அசாஞ்சேவுக்கு குடியுரிமை வழங்கியது ஈகுவடார் அரசு

அமெரிக்காவின் பாதுகாப்பு ரகசியங்களை அம்பலப்படுத்திய விக்கி லீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சேவுக்கு, ஈகுவடார் அரசு, குடியுரிமை வழங்கியுள்ளது.

விக்கி லீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே, கடந்த 2010 ஆம் ஆண்டு அமெரிக்காவின் பாதுகாப்பு ரகசியங்களை இணைய தளங்களில் வெளியிட்டு, உலக அளவில் அதிர்ச்சிகளை ஏற்படுத்தினார்.

இதற்கிடையில் 2012ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த அசாஞ்சே மீது, ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த இரண்டு பெண்கள் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டை தெரிவித்தனர். இந்த வழக்கில், ஜூலியன் அசாஞ்சே கைதாவதை தடுக்கும் நோக்கில், லண்டன் தப்பியோடினார்.

மேலும், லண்டனில் இருந்து தான் நாடு கடத்தப்படுவதில் இருந்து தப்பிக்க முயற்சித்த அசாஞ்சேவுக்கு, ஈகுவடார் தூதரகம் அடைக்கலம் அளித்தது. இதையடுத்து, கடந்த 5 வருடங்களுக்கு மேலாக 47 வயதானஅசாஞ்சே ஈகுவடார் தூதரகத்தில் வசித்தார்.

இந்த நிலையில், கடந்த மாதம் ஜூலியன் அசாஞ்சே, ஈகுவடார் அரசிடம் குடியுரிமை கோரி விண்ணப்பித்ததன் பிரகாரம், ஈகுவடார் அரசு, அசாஞ்சேவிற்கு நிரந்தர குடியுரிமை வழங்கியுள்ளதாக, ஈகுவடார் வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, ஜூலியன் அசாஞ்சே விரைவில் ஈகுவடார் செல்வார் என எதிர்பார்க்கிப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.

பல்லியை உற்றுக் கவனியுங்கள் : நமது மரண தேதி தெரிந்து விடும் நெஞ்சைப் பிடித்துக் கொண்டு படிங்க