படத்தில் இருக்கும் இடத்தை கண்டுபிடிங்க ஏன் உலகமே கொண்டாடுகிறது பறந்து விரிந்த மரபு

தைப்பொங்கல் தமிழர்களால் சிறப்பாகக் கொண்டாடப்படும் ஒரு தனிப்பெரும் விழா. தமிழர் திருநாளாக தமிழர்களால் தமிழ்நாடு, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், ஐரோப்பிய நாடுகள், வட அமெரிக்கா, தென் ஆப்பிரிக்கா, மொரிசியசு என தமிழர் வாழும் அனைத்து நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது.

பொங்கல், உழைக்கும் மக்கள் இயற்கைத் தெய்வமாகக் கருதப்படும் சூரியனுக்கும், மற்ற உயிர்களுக்கும் சொல்லும் ஒரு நன்றியறிதலாகக் கொண்டாடப்படுகிறது.

ஆடி மாதத்தில் தேடி விதைத்த பயிர்களின் விளைச்சலை அறுவடை செய்து பயன் அடையும் பருவமே தை மாதம் ஆகும்.

அந்த அறுவடையில் கிடைத்த நெல்லின் புத்தரிசியைச் சருக்கரை, பால், நெய் சேர்த்துப் புதுப் பானையிலிட்டுப் புத்தடுப்பில் கொதிக்க வைத்துப் பொங்கல் சோறாக்கிக் சூரியனுக்கும் மாட்டுக்கும் படைத்து உண்டு மகிழும் விழாவே பொங்கல் விழாவாகும்.

நீர் வளம் கொண்ட இடங்களில் மூன்று வேளாண்மை நடக்கும். நீர் வளமில்லா இடங்களில் மழை நீர்த் தேக்கத்தால் ஒரு வேளாண்மைதான் விளைக்க முடியும்.

 தை மாத அறுவடையே நாடெங்கும் நிகழும். அறுவடை முடிந்து பெற்ற புத்தரிசி, கரும்பு, மஞ்சள், பனங்கிழங்கு, நம்முடைய கொடிவழிக் காய்கறிகள் (குறிப்பாக அவரை, புடலை, கத்திரி, வாழை, சர்க்கரை வள்ளிக் கிழங்கு, கருணைக் கிழங்கு போன்றவையே படையலாக வைக்கப்படும். செந்நெற் பச்சரிசியைப் பெரும்பாலும் தவிடு போக்காமல் நீர் சேர்த்துச் சமைத்து பருப்புக் குழம்புடன் உண்பதும் மரபு.

பொங்கல் விழாவை தமிழர் தேசிய விழாவாக பலர் கருதுகின்றனர். பொங்கலை தமிழர்கள் சமயங்களைக் கடந்து கொண்டாடும் வழக்கமும் உள்ளது.

கிருத்துவர்கள் தங்கள் தேவாலயங்களில் கரும்புடன் பொங்கள் வைத்து கொண்டாடுகின்றனர்.

மதுரை மேலூரை அடுத்த அரிட்டாபட்டி கிராமத்தில் சிறப்புப் பொங்கல் விழா கொண்டாப்பட்டது.

இதில் அமெரிக்க, பிரான்ஸ் மற்றும் மதுரை எல்.டி.சி கல்லூரி மாணவர்கள் பலரும் பாரம்பரிய முறைபடி நெல் குத்தி அம்மனுக்கு பொங்கல் வைத்து  வழிபட்டனர்

தமிழக கலாச்சாரங்களை ஆய்வு செய்துவரும் பிரான்ஸ், அமெரிக்கா மற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவிகள் நம் பாரம்பரிய விழாவின் முக்கியத்துவத்தை கேட்டறிந்து அவர்களும் விழாவில் கலந்து கொண்டனர்..

சசிகலாவை வம்புக்கு இழுத்த சூர்யா விக்னேஷ்சிவன்