ஈரான் மீது புதிய தடைகளை விதிக்கவுள்ளாராம் டொனால்ட் ட்ரம்ப்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஈரான் மீது புதிய தடைகளை, விதிக்கவுள்ளதாக அமெரிக்க திறைசேரி செயலாளர் ஸ்டீவ் நியுச்சன் தெரிவித்துள்ளார்.

வெள்ளை மாளிகையில் நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதன் போது தொடர்ந்த கருத்து தெரிவித்த அவர், ஈரான் மீது மேலும் புதிய தடைகளை அமெரிக்கா அமுல்படுத்தும் என நான் எதிர்பார்ப்பதாக கூறியுள்ளார்.

கடந்த 2015ஆம் ஆண்டு அணுசக்தி உடன்படிக்கையின் ஒரு பகுதியாக ஈரான் மீது புதிய பொருளாதார தடைகளை விதிப்பதற்கு அமெர்க்க ஜனாதிபதி  ட்ரம்பிற்கு எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இதற்கமைய புதிய தடைகளை விதிப்பதற்கு சாதகமான தீர்மானத்தை ட்ரம்ப் எடுப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான பட்சத்தில், ஈரான் மக்களை இலக்கு வைத்து, புதிய தடைகள் ட்ரம்ப் நிர்வாகம் அமுல்படுத்த வாய்ப்பு உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது

நாட்டிற்கே அவமானம் நீதித்துறையை காறித்துப்பிய நீதிபதிகள் கேள்விக்கணையால் வறுத்தெடுத்த நிருபர்