சிகரெட் தர மறுத்த நபரை கொடூரமாகத் தாக்கிய சிறுவன்

சிறுவர்களுக்கு சிகரெட் தர மறுத்ததால் இந்திய வம்சாவளியை சேர்ந்த ஊழியர் லண்டனில் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார்.

இந்திய சேர்ந்தவர் விஜய் படேல் (49) வயதுடையவர். இவர், 2006ம் ஆண்டில் இருந்து ஐரோப்பிய நாடான பிரிட்டனின் லண்டன் நகரில் உள்ள ஒரு பல்பொருள் நிலையத்தில் வேலை செய்து வருகின்றார்..

சமீபத்தில் இவரது கடைக்கு வந்த சில சிறுவர்கள் விஜய் படேலிடம் சிகரெட் தரும்படி கேட்டுள்ளனர். 18 வயதுக்கு உட்படவர்களுக்கு சிகரெட் விற்கக் கூடாது என அந்நாட்டு சட்டம் இருப்பதால் அவர்களுக்கு சிகரெட் தர விஜய் மறுத்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த அந்த சிறுவர்கள் கொடூரமாக தாக்கியதில் குறித்த நபரின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் தொடர்பாக 16 வயது சிறுவன் ஒருவன் நீதிமன்றத்தில் நேற்று சரணடைந்துள்ளான் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

ஒரு நாளைக்கு ஒரு கோடி சம்பளம் அஜீத்துக்கு வலைவீசும் இயக்குனர்