வெறுமனே தோளில் போட்டு தட்டி கொடுத்தால் மட்டும் போதுமா தூக்கத்தினாலேயே 3500 குழந்தைகள் பலி

அமெரிக்காவில் துாக்கமின்மையால் ஆண்டுதோறும் 3,500 குழந்தைகள் பலியாகி வருகின்றனர்.

பத்துமாதம் சுமந்து பெறுவது கூட பெண்களுக்குப் பெரிய விஷயமல்ல. குழந்தை பிறந்து ஒரு வருடம் வரை அதனுடைய ஒவ்வொரு செயலுமே தாய்மார்களுக்குக் போராட்டம்தான்.

குறிப்பாகக் குழந்தைகளின் தூக்கம். குழந்தையின் தூங்கும் நேரம் பழக்கமாகும்வரை தாய்மார்களுக்குத் தூக்கமில்லாத பகல்களும், இரவுகளுமே மிஞ்சும்.

குழந்தை பிறந்த முதல் சில மாதங்கள் வரை, அதற்கு இரவு, பகல் வித்தியாசம் தெரியாது. எப்போது தூங்கும், எப்போது விழிக்கும் எனச் சொல்ல முடியாது.

மாதங்கள் போகப் போகத்தான் இது சரியாகும். ஆறாவது மாதத்திலிருந்து சில குழந்தைகள் இரவு வேளைகளில் தூக்கமில்லாமல் அழலாம்.

பசி மற்றும் படுக்கையை நனைக்கும் நேரம் தவிர, மற்ற நேரங்களிலும் அடிக்கடி எழுந்திருக்கலாம்.

இந்தச் சந்தர்ப்பங்களில்தான் குழந்தை தூங்கும் நேரத்தைத் தாய்மார்கள் முறைப்படுத்த வேண்டும். தூக்கம் என்பது இரவு நேரச் செயல், அதாவது எந்தவித விளையாட்டும் இல்லாத நேரம் என அதற்கு உணர்த்த வேண்டும்.

இப்படி சரியான முறையில் குழந்தையை பழக்கப்படுத்தாமல் அமெரிக்காவில் தூக்கமின்மையால் கடந்த ஆண்டில் 3,500 குழந்தைகள் பலியாகி உள்ளனர்.

 2015ல் நடத்திய ஆய்வில் இதற்கு தாய்மார்கள் உறங்கும் நிலையே பாதுகாப்பற்றதாக இருப்பதாக கண்டறியப்பட்டது.

பாதுகாப்பற்ற துாக்கம் என்பது, குழந்தை தந்தையிடத்திலோ அல்லது தாயிடத்திலோ அவர்களது வயிற்றுப்பகுதியை ஒட்டி உறங்குவது தான்.

இதில் மென்மையான படுக்கைகளில் தலையணைகள், போர்வைகள், மரத் தொட்டில்கள், அடைக்கப்பட்ட பொம்மைகள் மற்றும் துாங்கும் நிலைப்பாடுகள் அடங்கும்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீம்ஸ் கிரியேட்டர்களை சிறுமி ஹாசினியை கொன்றவனுடன் ஒப்பிட்ட காயத்ரி ரகுராம்