சர்வதேச செய்தி நிறுவனத்தின் பத்திரிகையாளரை கடத்த முயற்சி

பாகிஸ்தான் இராணுவத்தை கடுமையாக விமர்சித்து வரும் பிரபல பத்திரிகையாளரை ஆயுதங்களுடன் வந்த மர்ம நபர்கள் அடித்து கடத்த முயன்ற சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இந்தியாவை சேர்ந்த டபிள்யூ.ஐ.ஓ.என். எனப்படும் 'வேர்ல்டு இஸ் ஒன் நியூஸ்' சர்வதேச செய்தி நிறுவனத்தின், பாகிஸ்தான் செய்தியாளர் குழு தலைவர் தாஹா சித்திக். பாகிஸ்தான் இராணுவத்தை கடுமையாக விமர்சித்து வரும் இவர் சமீபத்தில் பாக்கிஸ்தானில் ராவல்பிண்டி நகரில் உள்ள விமான நிலையத்துக்கு டாக்சியில் சென்றார்.

இதன் போது அடையாளம் தெரியாத 12 பேர் அடங்கிய கும்பல் குறித்த பத்திரிகையாளரை வழிமறித்து, அடித்து அவரை கடத்திச் செல்ல முயன்றுள்ளனர். அவர்களிடம் இருந்து தப்பியோடி வந்த சித்திக் தனக்கு நேர்ந்த கொடுமைகள் குறித்து பொலிசில் முறைப்பாடு வழங்கினார். இதனையடுத்து குறித்த சம்பவம் தொடர்பில் பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

டார்ச்சரில் இருந்து தப்பித்து வந்த நடிகை தஞ்சம் புகுந்துள்ளது யாரிடம் தெரியுமா