ரொஹிங்கியா இன தீவிரவாத முஸ்லீம்கள் 10 பேரை கொலை செய்தது உண்மை தான்

மியன்மாரின் ரொஹிங்கியா இன தீவிரவாத முஸ்லிம்கள் 10 பேரை தாம் கொலை செய்ததாக அந்த நாட்டு இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.

கடந்த செப்டெம்பர் மாதம் ஆரம்பிக்கப்பட்ட கிளர்ச்சியாளர்களின் தாக்குதல்களின் போது தம்மால் சிறைபிடிக்கப்பட்ட 10 முஸ்லிம் தீவிரவாதிகளை கொலை செய்ததாக இராணுவத்தினர் கூறியுள்ளனர்.

ரஹைய்ன் மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்ட படை நடவடிக்கையில் இராணுவத்தால் இழைக்கப்பட்ட குற்றங்களை அரிதமான வகையில் அவர்கள் ஏற்றுக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஓகஸ்ட் மாதம் ரொஹிங்கியா கிளர்ச்சியளார்களால் மியன்மார் இராணுவத்தினர் மீது தாக்குதலொன்று நடத்தப்பட்டிருந்தது. இதனையடுத்து கிளர்ச்சியாளர்கள் மீதான தாக்குதல் நடவடிக்கைகளை மியன்மார் இராணுவத்தினர் ஆரம்பித்ததுடன், இதன்காரணமாக 6 இலட்சத்து 50 ஆயிரம் ரொஹிங்கியா இன மக்கள் அயல்நாடான பங்களாதேஷிற்கு இடம்பெயர்ந்திருந்தனர்.

எனினும் மியன்மார் இராணுவத்தின் இந்த நடவடிக்கை, இனசுத்திரிப்பு என ஐக்கிய நாடுகள் சபை கண்டனம் வெளியிட்டிருந்தது. இந்த நிலையில் கடந்த டிசம்பர் மாதம் 18 ஆம் திகதி ராக்கைனின் மேற்கு பகுதியில் மனித புதைகுழி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதுடன், 10 சடலங்களும் மீட்கப்பட்டிருந்தன.

இது தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில், ராக்கைனின் மேற்கு பகுதியில் நடத்தப்பட்ட முற்றுகை நடவடிக்கையின் போது 10 ரொஹிங்ய ஆயுததாரிகளை தாம் கொன்றதாக அந்நாட்டு  இராணுவம் ஒப்புக்கொண்டுள்ளது.

அஜித் ரசிகர்கள் உருவாக்கிய ஃபர்ஸ்ட்லுக் போஸ்டருக்கு உண்டான க்ரேஸ் ஒரிஜினல் போஸ்டர் வந்தால்