விமானப்படையின் முன்னாள் தளபதி எஸ்.பி.தியாகிக்கு இத்தாலி நீதிமன்றம் நற்சான்று

ஹெலிகாப்டர் பேர் ஊழல் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள விமானப் படையின் முன்னாள் தளபதி எஸ்.பி.தியாகிக்கு 
எதிராக போதிய ஆதாரங்கள் இல்லை என இத்தாலி நீதிமன்றம் நற்சான்று வழங்கியுள்ளது.

ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட வி.வி. ஐ.பி. க்களுக்கு ஹெலிகாப்டர் வாங்க, கடந்த ஐ.மு., கூட்டணி ஆட்சியின் போது ,
பிரிட்டனைச் சேர்ந்த அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்துடன், 3,600 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்யப்பட்டது.

இந்த ஒப்பந்தம் அளிப்பதற்காக, 423 கோடி ரூபாய் லஞ்சம் கைமாற உதவியதாக மாஜி விமானப் படை தளபதி எஸ்.பி. தியாகி உள்ளிட்டோர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. இந்த வழக்கு இத்தாலியின் மிலன் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

நேற்று நடந்த விசாரணையில் தியாகிக்கு எதிராக போதிய ஆதாரங்கள் இல்லை என நீதிமன்று கூறியுள்ளதோடு முன்னதாக இந்த வழக்கில் அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்தின் துணை நிறுவனமான பின்மெகானிகா நிறுவனத்தின் முன்னாள் தலைவர் குஸெப்பி ஒர்சி, அகஸ்டா வெஸ்ட் லேண்ட் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாகி ,புருனோ ஸ்பாக்லினி ஆகியோரும் விடுதலை செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வெடித்தது பிரச்சனை வீட்டை விட்டு வெளியேறுகிறாரா ஐஸ்வர்யா ராய்