65 ஆண்டுகால ரகசியத்தை மனம் திறந்த இங்கிலாந்து ராணி எலிசபெத்

லண்டன்: இங்கிலாந்து ராணியாக தான் முடிசூட்டி கொண்ட அனுபவங்களை 65 ஆண்டுகளுக்கு பிறகு, ஆங்கில தொலைகாட்சி சேனலுக்கு ராணி எலிசபெத் பேட்டி அளித்துள்ளார்.

இங்கிலாந்து ராணி எலிசபெத்-2 கடந்த 1952-ஆம் ஆண்டு முதல் பிரிட்டன், கனடா, ஆஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்து ஆகியவற்றின் ராணியாக உள்ளார். வயது அடிப்படையில் தற்போது ஆட்சி புரிந்து வருபவர்களில் இவரே அதிக வயதானவர். இவருக்கு 92 வயதாகிறது.

எலிசபெத் ராணிக்கு தான் முடிசூடிக் கொண்டது குறித்து 65 ஆண்டுகள் கழித்து தற்போது மனம் திறந்துள்ளார்.

முடிசூடி 65 ஆண்டுகள் 
27 வயதில் முடிசூட்டிக் கொண்டேன் .

ராணி எலிசபெத் முடிசூடி 65 ஆண்டுகள் நினைவையொட்டி ஆங்கில தொலைகாட்சி சேனல் ஒன்றுக்கு அவர் பேட்டி அளித்தார். அதில் அவர் கூறுகையில் நான் ராணியாக 27 வயதில் நியமிக்கப்பட்டேன். அதாவது கடந்த 1953-ஆம் ஆண்டு ஜூன் 2-ஆம் தேதி முடிசூடிக் கொண்டேன்.

 

அசௌகரியமாக இருந்தது 
எந்நேரம் கிரீடம்

வெஸ்ட்மின்ஸ்டர் அப்பேயில் பயணம் செய்தது அசௌகரியமாகவும், பயங்கரமாகவும் இருந்தது. தலையில் எந்நேரமும் கிரீடத்தை அணிந்து கொண்டிருப்பது சிரமமாக இருந்தது. மற்றபடி எல்லாம் நன்றாக இருந்தது.

 

 

சமதள சவாரி 
தந்தை முடிசூட்டியபோது...

அனைவரையும் அரவணைத்துக் கொண்டு சமதள சவாரி செய்ய வேண்டியிருந்தது. கடந்த 1936-ஆம் ஆண்டு எனது தந்தை ஜார்ஜ் VI மகுடம் சூட்டிக் கொண்டபோது எனக்கு 10 வயது.


தங்க ரதம் பயணம் 
1760-இல் இருந்து தங்க ரதம்

கடந்த 1760-ஆம் ஆண்டு தங்க ரதம் அமைக்கப்பட்டு அதுவே அனைத்து பிரிட்டிஷ் மன்னர்களுக்கும் பயன்பட்டிருந்தது. இது ஜார்ஜ் IV மன்னராட்சியிலிருந்து பயன்படுத்தப்பட்டு வருகிறது என்றார் ராணி எலிசபெத்.

தொழிலாளர்களின் பிடி பணத்திலிருந்து ரூ15 ஆயிரம் கோடி செலவு செய்தது உண்மையே