ஜேர்மனியின் ஹம்பர்க்கில் 98 சதவீத அகதிகளுக்கு வேலையில்லை: வெளியான தகவல்

ஜேர்மனியின் இரண்டாவது பெரிய நகரான ஹம்பர்க்கில் 98 சதவீத அகதிகள் வேலையில்லாமல் உள்ளது இன்ஸ்டியூட் ப்ரோக்னஸ் நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

லிபரல் கட்சியான ஜனநாயக கட்சி இதை விமர்சித்துள்ளது. அதன் அறிக்கையில், ஆய்வு முடிவின் படி 1067 அகதிகளில் வெறும் 20 பேருக்கு மட்டுமே பணி உள்ளது தெரியவந்துள்ளது.

ஹம்பர்க்கின் மந்தமான வேலை மற்றும் ஒருங்கிணைப்பு திட்டம் தான் இந்த ஏமாற்ற முடிவுகளுக்கு காரணமாகும்.

புகலிடம் குறித்த நடைமுறை வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டுள்ள அகதிகள் மீது வேலை விடயத்தில் தனி கவனம் செலுத்த வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

ஹம்பர்க்கில் திறமையான வேலையாட்கள் இல்லாமல் பல நிறுவனங்கள் தவித்து வருகின்றன.

எடுத்துக்காட்டுக்கு, நகரில் உள்ள மூன்றில் ஒரு நிறுவனம் திறமையான ஊழியர்களை கொண்டு காலி பணியிடங்களை நிரப்ப கடினமாக உள்ளதாக புகார் கூறியுள்ளது.

2030-க்குள் ஜேர்மனி, மூன்று மில்லியன் என்ற கணக்கில் வேலைக்கு பொறுத்தமான தொழிலாளர்களின் பற்றாக்குறையை சந்திக்க நேரிடலாம் என இன்ஸ்டியூட் தெரிவித்துள்ளது.

 

 

சிம்மம் ராசியின் ரகசியம்! புரிந்த கொள்ள முடியாத புதிரும் நீங்கள்தான்..