உண்மை நிலை இதுதானா..? கடலில் இருந்து கரைக்கு படையெடுக்கும் பாம்புகள்.. பீதியில் உறைந்த மக்களுக்கு அர

மட்டக்களப்பு கடற்பரப்பில் மீனவர்களின் வலையில் சிக்கியவை கடல் பாம்புகள் அல்ல என தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இலங்கையில் தமிழர்கள் வசிக்கும் பகுதியான மட்டக்களப்பு மாவட்டம் நாவலடியில் கடந்த வாரம்  கர வலை தொழிலில் ஈடுபட்ட அனைத்து மீனவர்களின் வலைகளிலும் பாம்புகள் பிடிபட்டது.

மேலும் அந்த பகுதியில் கடல் அலையுடன் பாம்புகளும் சேர்த்து கரை ஒதுங்கியது. அண்மைக் காலமாக கடல் கொந்தளிப்பு காரணமாக மீனவர்கள் பெரும் துயரத்திற்கு ஆளான நிலையில் இவ்வாறு வலையில் பாம்புகள் சிக்கியுள்ளது.

காலநிலை மாற்றங்கள் ஏற்பட சாத்தியக்கூறுகள் உள்ளதாக மக்கள் மத்தியில் அச்சம் நிலவி வந்தது.

இதுபோன்று கடந்த சுனாமி பேரலை ஏற்பட்ட காலத்திலும் பெருமளவான பாம்புகள் மட்டக்களப்பு பகுதியில் படையெடுத்ததால் இவ்வாறு மக்கள் மத்தியில் அச்சநிலையேற்பட்டுள்ளது.

அதிகளவிலான பாம்புகள் ஏன் பிடிபடுகின்றன என்பது தொடார்பாக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மக்கள் தெரிவித்திருந்தனர்.

பாம்புகள் கரை ஒதுங்கிய காட்சி:

இந்த நிலையில், மட்டக்களப்பு கடற்பரப்பில் மீனவர்களின் வலையில் சிக்கியவை கடல் பாம்புகள் அல்ல என தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கங்கை, நதிகளில் காணப்படும் Anguilla மீன் வகை என்று  கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.

சுத்தமான நீரில் உருவாகும் இந்த மீனினம் இனப்பெருக்கத்திற்காக ஏரிகளின் வழியாக  கடலுக்கு செல்வதாக குறிப்பிடுகின்றனர்.

அங்கு பெரிய அளவிலான மீன்கள் ஒன்றாக இணைந்து முட்டையிடுகின்றது. பின்னர், 02, 03 அங்குல நீளமாக சிறிய மீன் குட்டிகள் மீண்டும் ஏரி, குளம் மற்றும் நதிகளுக்கு சென்று வளர ஆரம்பித்து விடும் என கூறுகின்றனர்.

இனப்பெருக்கத்திற்காக வரும் மீன்கள் இனப்பெருக்கத்தின் பின்னர் நீண்ட தூரம் பயணிக்கும் எனவும் பின்னர் அவற்றிற்கு என்ன நடக்கும் என்பது இன்னமும் ஆய்வு செய்து பார்த்ததில்லை என அவர் குறிப்பிட்டுள்ளனர்.

அதற்கு ஏற்றவாறு இந்த மீனினம் தனது வாழ்க்கை முறையினை மேற்கொள்ள சென்றதினால் இவ்வளவு பெரிய அளவில் சிக்கியுள்ளது.

இதனால் சுனாமி அல்லது காலநிலை மாற்றங்கள் ஏற்படப்போவதில்லை என்று குறிப்பிடப்படுகிறது.

25 வயது பெண்ணை காதலித்து மணந்த 82 வயது தாத்தா