வடகொரியா இராணுவ வீரரின் உடலை துளைத்த 40 குண்டுகள்

தெற்கு எல்லையை கடந்து செல்ல முயற்சித்த வட கொரியா இராணுவ வீரரின் உடலை 40 புல்லட்டுகள் துளைத்துள்ளன.

பெயர் குறிப்பிடப்படாத வட கொரிய இராணுவ வீரர் ஒருவர், காரின் மூலம் தெற்கு எல்லையை கடக்க முயற்சித்துள்ளார்.

காரில் சென்றுகொண்டிருந்தபோது, காரின் சக்கரம் விரிவடைந்து தனது வேகத்தை குறைத்துக்கொண்டதால், அங்கு நின்றிருந்த சக இராணுவ வீரர்களின் கண்களில் சிக்கியுள்ளார்.

இதனால், அவர்களிடம் இருந்து தப்பித்து செல்வதற்காக இவர் ஓட முயன்றபோது, இராணுவ வீரர்கள் இவரை துப்பாக்கில் சுட்டுள்ளனர், இதில் 40 குண்டுகள் இவரது உடலை துளைத்துள்ளது.

சம்பவ இடத்திலேயே நிலைகுலைந்த இவர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இவரது நிலைமை தற்போது மோசமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

 

அடுத்த படத்திற்காக தல அஜித் செய்த அதிரடி காரியம்..! அதிர்ச்சியில் நடிகர்கள் …!!