இதென்னடா நாடு என்பதை சுக்கு நூறாக்கி.. இதுதான்டா நாடு என்று நிமிர்ந்த இந்தியா: அமெரிக்காவே அதிர்ந்து

இந்தியாவின் பொருளாதாரம் அதாள பாதாளத்தில் சென்று கொண்டிருக்கிறது என்ற மாயையை தவிடு பொடியாக்கும் வகையில், 2028-ம் ஆண்டில் ஜப்பானை பின்னுக்கு தள்ளி என்றாக தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

இது தொடர்பாக வெளியான ஆய்வறிக்கையில் உலகில் மூன்றாவது மிகப்பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவெடுக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் நியூயார்க் நகரை தலைமையிடமாக கொண்டு இயங்கும் பேங்க் ஆப் அமெரிக்கா.

இந்த வங்கியின் மெர்ரி லிஞ்ச் ''india 2028'' என்ற தலைப்பில் இந்திய பொருளாதாரத்தை மதிப்பீடு செய்து ஆய்வறிக்கையை சமர்பித்துள்ளது.

இந்தியாவின் பொருளாதார புள்ளி விபரம் குறித்து அதில் இடம்பெற்றுள்ளதாவது:

இந்தியா தனது உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தியான ஜி.டி.பி 7 சதவிகிதம் வளர்ச்சியை எட்டியுள்ளது.

இதன்படி அடுத்த 10 ஆண்டுகளில் அதாவது 2028-ம் ஆண்டில் இந்தியா தனது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஜப்பானை பின்னுக்கு தள்ளி மூன்றாவது மிகப்பெரிய பொருளாதார நாடாக உருவெடுக்க இருக்கிறது.

இந்த விபரமானது அமெரிக்காவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை விட 10 சதவீதம் அதிகம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

இதன் மூலம் 2017-ம் ஆண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் முதலீட்டு விகிதம் 32.4 சதவீதத்தில் இருந்து 35 சதவீதமாக உயரும் என்று அந்த அறிக்கையி்ல் கூறப்பட்டுள்ளது.

பண மதிப்பு இழப்பு,ஜி.எஸ்.டி போன்றவற்றின் உண்மையான தாக்கம் இனி வரும் காலங்களில் தான் எதிரொலிக்கும். இப்போதைய பொருளாதார வீழ்ச்சி தற்காலிகமானது என்று கூறியுள்ளது.

பாறைக்குள்ளே கோவில் மறைத்துள்ளதா..? அதிர்ச்சியடைந்த தொல்லியல்துறை... ஒரு கோவிலையே பாறைக்குள் மறைத்து வைத்த பாண்டியர்கள்