ரூ.5 கோடி மதிப்புள்ள காரின் மீது ஏறி விளையாடிய இளைஞர்: வெளுத்த உரிமையாளர்

கலிபோர்னியாவில் 5 கோடி ரூபாய் மதிப்புள்ள காரின் மீது ஏறி குதித்த இளைஞரை, அந்த காரின் உரிமையாளர் அடித்து துவைத்துள்ளார்.

சான் பிரான்சிஸ்கோ நகரில் நபர் ஒருவர் தனது 5 கோடி ரூபாய் மதிப்பிலான Lamborghini Aventador காரின் அருகில் நின்று போன்பேசிக்கொண்டிருந்தபோது, எதிரே வந்த இளைஞர் ஒருவர் ஜாலிக்காக அந்த காரின் மேற்புறத்தில் ஏறி குதித்து சென்றுள்ளான்.

இதனைப்பார்த்து, கோபமடைந்த உரிமையாளர் அந்த இளைஞரை துரத்தி சென்றுள்ளார், ஆனால் பிடிக்கமுடியவில்லை.

இந்நிலையில் மீண்டும் அந்த இளைஞன் காரின் மீது ஏறி குதிக்க முற்படுகையில் அவனை மடக்கி பிடித்த உரிமையாளர், அவனது முகத்தில் குத்துவிட்டு, அடித்து கீழே தள்ளியுள்ளார்.

இந்த காரின் மதிப்பு உனக்கு தெரியுமா? உன்னால் இந்த காரை ஓட்ட முடியுமா? என்ற கேள்விகளை எழுப்பியவாறு அந்த இளைஞரை அடித்துள்ளார்.

இந்த சம்பவத்தை பார்த்த அங்கிருந்தவர்கள் அதனை வீடியோ எடுத்துள்ளனர்.

 

அமெரிக்காவின் 4R’s+S” விபரீத கொள்கை… என்ன நிகழப்போகிறது இந்தியாவிற்கு..? மக்கள் ஆடுகளை போல பலியாக்கப