உயிருடன் இருக்கும் பிரித்தானிய பெண் தீவிரவாதியின் மகன்

அமெரிக்கா விமானப்படை தாக்குதலில் கொல்லப்பட்ட பிரித்தானிய பெண் தீவிரவாதியின் மகன் உயிரோடு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரித்தானியாவை சேர்ந்த Sally Jones(50) என்ற பெண் கடந்த 2013 ஆம் ஆண்டு தனது மகன் JoJo- வுடன் சிரியாவுக்கு சென்று ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தில் இணைந்துள்ளார்.

தீவிரவாதிகள் நடத்திய பல்வேறு கொலைகளுக்கு உறுதுணையாக இருந்த இப்பெண், தனது 12 வயது மகனையும் இளம் தீவிரவாதியாக மாற்றியுள்ளார்.

இச்சிறுவனும், கையில் துப்பாக்கியுடன் பிரித்தானியாவை சேர்ந்த 5 பேரை சுட்டுக்கொள்ளும் வீடியோவில் தோன்றியுள்ளான்.

ஐஎஸ் தீவிரவாதிகளின் சார்பில் பல்வேறு மிரட்டல்களை மக்களுக்கு விடுத்த இப்பெண் White Window என அழைப்பட்டுள்ளார்.

 

 

இந்நிலையில், சிரியாவில் ஐஎஸ் தீவிரவாதிகளின் மீது தாக்குதல் நடத்தி வரும் அமெரிக்க விமானப்படையால், Sally கொல்லப்பட்டுள்ளார். அவரது டிஎன்ஏ மாதிரியை வைத்து இரு நிரூபணமாகியுள்ளது.

இந்நிலையில், இவருடன் சேர்ந்து அவரது 13 வது மகனும் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என கூறப்பட்டு வந்துள்ள நிலையில், ட்ரோன் தாக்குதலில் Sally -க்கு மட்டுமே குறிவைக்கப்பட்டதே தவிர அவரது மகனுக்கு கிடையாது.

Sally கொலை செய்யப்படும்போது அவரது மகன் அவருடன் இல்லை என்றும், அச்சிறுவன் உயிரோடு தான் இருக்கிறான் எனவும் உளவுத்துறை ஆதாரங்கள் தெரிவிக்கின்றன.

இன்று 13ஆம் திகதி வெள்ளிக்கிழமை கெட்ட சகுனமா?